லாக்டவுன் 5.0:கட்டுப்பாட்டு பகுதிகளில் கட்டுப்பாடுகளை முழுமையாக அமல்படுத்த விரும்பும் மாநில அரசுகள்

டெல்லி: கொரோனா லாக்டவுன் நீட்டிக்கப்படும் நிலையில் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அனைத்து கட்டுப்பாடுகளையும் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளன.

கொரோனா லாக்டவுன் நீட்டிக்கப்பட்ட நிலையிலும் குறிப்பிட்ட பகுதிகளில் இதன் தாக்கம் தீவிரமாக இருக்கிறது. இத்தகைய கட்டுப்பாட்டுப் பகுதிகளை அடையாளம் கண்டு அப்பகுதிகளில் கொரோனா பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதைய லாக்டவுன் வரும் 31-ந் தேதியுடன் முடிவடைகிறது. இந்த லாக்டவுன் மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. இது தொடர்பாக மத்திய- மாநில அரசுகள் ஆலோசனை நடத்தி வருகின்றன.

கடந்த லாக்டவுன்களைப் போல அல்லாமல் நோய் கட்டுப்பாட்டுப் பகுதி என வரையறுக்கப்பட்ட இடங்களில் கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்பதில் மாநில அரசுகள் முனைப்பாக உள்ளன. இதனையே மத்திய அரசிடம் மாநில அரசுகளும் வலியுறுத்தி உள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மாநில முதல்வர்களுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி இருக்கிறார். இவை அடிப்படையில் அடுத்த லாக்டவுன் நீட்டிப்புக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட உள்ளது.

Related posts

Leave a Comment