அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை.. மாவட்டங்களிடையே பஸ் போக்குவரத்து துவக்கம்?

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது மற்றும் வேறு தளர்வுகள் அமல்படுத்துவது குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

நாடு முழுக்க தற்போது நான்காவது கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பொதுப்போக்குவரத்து இன்னும் தொடங்கவில்லை என்ற போதிலும், ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

மே 31ஆம் தேதியுடன் இந்த ஊரடங்கு காலம் முடிவடைகிறது. இதையடுத்து ஜூன் 15ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில்தான், 25ம் தேதி, மருத்துவ நிபுணர் குழு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தி இருந்தது.

அப்போது, கொரோனா நோய் பரவலை தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஊரடங்கை முழுமையாக தளர்த்த வேண்டாம் என்று, மருத்துவ நிபுணர் குழு அப்போது பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான்தான், இன்று காலை, 10 மணிக்கு, தலைமை செயலகத்தில், வீடியோ கான்பரன்ஸ் வழியாக, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் உயரதிகாரிகள் உடனுள்ளனர்.

சென்னையிலிருந்து பேருந்து போக்குவரத்தை பிற நகரங்களுக்கு துவங்குவது இப்போதைக்கு முடியாத விஷயம் என அந்த கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், பச்சை மற்றும் மஞ்சள் மண்டலங்களில் உள்ள மாவட்டங்கள் இடையே பஸ்களை இயக்குவது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Related posts

Leave a Comment