BSNL மீண்டும் அதிரடி.! 4மாதங்களுக்கு இலவச சேவை! வரம்பற்ற அழைப்பு மற்றும் டேட்டா.!

பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் பட்டியலிலிருந்து நான்கு திட்டங்களை அகற்றிய பின்பு, தற்பொழுது பிஎஸ்என்எல் தனது மேடையில் அதிகமான பயனர்களைக் கவரும் புதிய சலுகையை அறிமுகம் செய்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய பிராட்பேண்ட் பிளேயர் இப்போது அதன் சந்தாதாரர்களுக்கு நான்கு மாதங்கள் வரை இலவச சேவையை அதன் நான்கு புதிய திட்டத்தின் மூலம் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல் புதிய பிராட்பேண்ட் திட்டங்கள் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிராட்பேண்ட் சேவைகளைப் பஞ்சாப், கொல்கத்தா, லடாக், நாகாலாந்து, ஒடிசா, மிசோரம், மாதப் பிரதேசம், சென்னை மற்றும் நாட்டின் பல இடங்களில் கிடைக்கும்படி வழங்கிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த 4 மாத இலவச சேவை 36 மாதத் திட்டத்துடன் கிடைக்கிறது. பிஎஸ்என்எல் 36 மாத பாரத் பைபர் பிராட்பேண்ட் காம்போ திட்டத்தின் கீழ் 4 திட்டங்களைக் கொண்டுள்ளது. 3 மாதம் இலவச…

Read More

3 மாதம் கழித்து இந்தியா வரும் விஸ்வநாதன் ஆனந்த்.. சென்னை வருவதில் சிக்கல்

சென்னை : விஸ்வநாதன் ஆனந்த் கடந்த 3 மாதங்களாக கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக ஜெர்மனியில் சிக்கி இருந்தார். அவர் தற்போது இந்தியா வர உள்ளார். ஜெர்மனியில் பன்டேஸ்லிகா செஸ் தொடரில் பங்கேற்க சென்ற அவர் இந்தியாவில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் அங்கேயே சிக்கினார். மேலும் ஜெர்மனியில் அப்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்தியா, ஜெர்மனி இரண்டு நாடுகளிலும் விமான பயணத்திற்கு கடும் கட்டுப்பாடு இருந்தது. அதனால், விஸ்வநாதன் ஆனந்த் ஜெர்மனியில் தனியாக ஒரு அபார்ட்மெண்ட்டில் தங்கி இருந்தார்.

Read More

இந்த வருஷம் ஐபிஎல் கண்டிப்பாக நடக்கும்… முன்னாள் வீரர்கள் நம்பிக்கை

மும்பை : ஐபிஎல் போட்டிகள் இந்த ஆண்டு கண்டிப்பாக நடக்கும் என்று முன்னாள் கேப்டனும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உள்ள நிலையில் காலி மைதானங்களில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கும் அவர் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் 3 அல்லது 4 மைதானங்களிலேயே அனைத்து போட்டிகளையும் நடத்தவும் அவர் பிசிசிஐக்கு அறிவுறுத்தியுள்ளார். இதே கருத்தை முன்னாள் வீரர் விவிஎஸ் லஷ்மனும் தெரிவித்துள்ளார். பிசிசிஐ முடிவுக்கு வரவேற்பு இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் கண்டிப்பாக நடக்கும் என்று முன்னாள் கேப்டன் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உள்ள தற்போதைய சூழலில் ரசிகர்கள் அற்ற காலி மைதானங்களில் போட்டிகளை நடத்தும் பிசிசிஐயின் முடிவுக்கும்…

Read More

Anaiyur President Lakshminarayanan

விபத்தில் காயம் அடைந்த அஇஅதிமுக கழக உடன்பிறப்புகளை நமது ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவரும் சிவகாசி ஒன்றிய அம்மா பேரவை செயலாளருமான லயன் திரு.கருப்பு (எ) வீ.லட்சுமி நாராயணன் அவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினார்

Read More

100 நாள் வேலை திட்டம் – அடுத்த 3 மாதங்களுக்கு கூலியை வீடுகளுக்கே சென்று வழங்க முதல்வர் உத்தரவு

சென்னை: 100 நாள் வேலைதிட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு கூலியை வீடுகளுக்கே சென்று வழங்கிட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 35 லட்சம் பேர் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் தங்கள் கூலியை வங்கிகளுக்கு சென்று பெற்றுக் கொள்கிறார்கள். தற்போது கொரோனா ஊரடங்கால் வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் பேருந்துகளும் இயங்காததால் வங்கி சென்று பணம் எடுக்க முடியாத சூழல் நிலவுகிறது. இதையடுத்து அடுத்த 3 மாதங்களுக்கு கூலியை வீடுகளுக்கே சென்று வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். அவர் கூறுகையில் வங்கி அதிகாரிகள் மூலம் அடுத்த 3 மாதங்களுக்கு தொழிலாளர்களுக்கு வீடுகளுக்கே சென்று வழங்கப்படும். நோய் குறையும் வரை அடுத்த 3 மாதத்திற்கு இதே நடைமுறை தொடரும் என அவர் தெரிவித்தார்.

Read More

தோனி தான் பெஸ்ட் கேப்டன்.. அதை சொன்னா சில பேருக்கு கஷ்டமா இருக்கும்.. போட்டு உடைத்த கிர்மானி!

மும்பை : இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சையது கிர்மானி, கேப்டனாக தோனி வைத்திருக்கும் சில சாதனைகளை வேறு எந்த கேப்டனும் வைத்திருக்கவில்லை என அதிரடியாக கூறி உள்ளார். சையது கிர்மானி 1983 உலகக்கோப்பை வென்ற அணியில் ஆடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கபில் தேவ், சுனில் கவாஸ்கர், பிஷன் சிங் பேடி உள்ளிட்ட சிறந்த முன்னாள் கேப்டன்களின் கீழ் ஆடியவர். உலகிலேயே சிறந்த கேப்டன் இந்திய அணியின் சிறந்த கேப்டன்கள் வரிசையில் நிச்சயம் தோனிக்கு இடம் உண்டு. ஆனால், தோனி இந்திய அணியில் மட்டுமின்றி, உலகிலேயே சிறந்த கேப்டன் என சையது கிர்மானி கூறி உள்ளார். அதற்கு காரணம், அவர் செய்த சாதனைகள் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய அணி இந்திய அணி 1970களில் வெளிநாடுகளில் சில குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து…

Read More

கொரோனாவுக்கு நடுவில் நிறைய துட்டு சம்பாதித்த ஒரே இந்திய வீரர்.. உலக அளவில் 66வது

நியூயார்க் : 2020ஆம் ஆண்டு உலக அளவில் அதிகம் சம்பாதித்த முதல் நூறு விளையாட்டு வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை. இந்தப் பட்டியலில் ஒரே ஒரு இந்திய விளையாட்டு வீரர் மட்டுமே இடம் பெற்றுள்ளார். அவர் வேறு யாருமல்ல. இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தான். கடந்த ஆண்டை விட 34 இடங்கள் முன்னேறி இருக்கிறார். அதிகம் சம்பாதித்த விராட் கோலி கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த இரண்டு மாதங்களில் எந்த கிரிக்கெட் போட்டியும் நடைபெறவில்லை. பெரிதாக விளம்பர வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. அப்படி இருந்தும் கடந்த ஆண்டை விட சுமார் 8 கோடி அதிகம் சம்பாதித்துள்ளார் விராட் கோலி. ஃபோர்ப்ஸ் பட்டியல் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வருடா வருடம் பல்வேறு பணக்காரர்கள் பட்டியல்களை வெளியிட்டு வருகிறது. அதில் பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலை சமீபத்தில்…

Read More

உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி உள்பட 4 முக்கிய காவல்துறை உயர் அதிகாரிகள் இன்று ஓய்வு

சென்னை: தமிழக உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி இன்றுடன் ஒய்வு பெறுகிறார். அவருடன் மேலும் ஒரு டிஜிபி மற்றும் 2 ஏடிஜிபிக்களும் ஓய்வு பெறுகிறார்கள். இதில் சத்திய மூர்த்திக்கு பணி நீட்டிப்பு வழங்க அரசு முன்வந்தது. ஆனால் பணி நீட்டிப்பை ஏற்க மறுத்துவிட்டார். தமிழக உளவுத்துறை ஐஜியாக இருப்பவர் சத்தியமூர்த்தி. இவரது பணிக்காலம் இன்று மாலையுடன் முடிகிறது. ஜெயலலிதா முதல்வராக இருந்த போது உளவுத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டார். 2016 சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் ஆணையத்தால் மாற்றம் செய்யப்பட்டார். தேர்தல் முடிவு வெளியான பின்னர் மே 23ஆம் தேதி இரண்டாவது முறையாக நியமிக்கப்பட்டார். பிப்ரவரி 2016ஆம் ஆண்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி முதல்வராக பதவி ஏற்ற பின்னர் தொடர்ந்து மூன்றாவது முறையாக உளவுத்துறை ஐஜியாக சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்டார். தமிழக காவல்துறையில் மிக சக்தி…

Read More

ரேஷன் கார்டை காண்பித்து கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 வரை கடன் பெறலாம்… செல்லூர் ராஜூ

மதுரை: ரேஷன் கார்டு இருந்தால் கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 வரை தனிநபர் கடன் பெறலாம் என்று தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரம் இன்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவித்து வருகின்ற போதிலும், முற்றிலும் இயல்பு நிலை திரும்பாமல் பழைய நிலைக்கு தமிழகம் செல்வது கடினம் ஆகும். ஏனெனில் ஊரடங்கால் இன்னும் ஏராளமான துறைகள் முடங்கி கிடக்கின்றன அதில் பணியாற்றி மக்கள் வேலை இல்லாமல் தவித்து வருகிறார்கள். இந்த சூழலில் மக்களுக்கு தமிழக அரசு கடந்த மூன்று மாதங்களாக விலையில்லாமல் ரேஷனில் உணவு பொருட்களை வழங்கி வருகிறது. அத்துடன் பல்வேறு நலவாரிய தொழிலாளர்களுக்கு 2000 வரை உதவி தொகை வழங்கி உள்ளது. அனைத்து ரேஷன் கார்டு தார்களுக்கும் ரூ.1000 வழங்கி…

Read More