ரேஷன் கார்டை காண்பித்து கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 வரை கடன் பெறலாம்… செல்லூர் ராஜூ

மதுரை: ரேஷன் கார்டு இருந்தால் கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 வரை தனிநபர் கடன் பெறலாம் என்று தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரம் இன்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவித்து வருகின்ற போதிலும், முற்றிலும் இயல்பு நிலை திரும்பாமல் பழைய நிலைக்கு தமிழகம் செல்வது கடினம் ஆகும். ஏனெனில் ஊரடங்கால் இன்னும் ஏராளமான துறைகள் முடங்கி கிடக்கின்றன அதில் பணியாற்றி மக்கள் வேலை இல்லாமல் தவித்து வருகிறார்கள்.

இந்த சூழலில் மக்களுக்கு தமிழக அரசு கடந்த மூன்று மாதங்களாக விலையில்லாமல் ரேஷனில் உணவு பொருட்களை வழங்கி வருகிறது. அத்துடன் பல்வேறு நலவாரிய தொழிலாளர்களுக்கு 2000 வரை உதவி தொகை வழங்கி உள்ளது. அனைத்து ரேஷன் கார்டு தார்களுக்கும் ரூ.1000 வழங்கி இருந்தது. அத்துடன் விவசாயம், சிறு கடைகள், மற்றும் கட்டுமானம், தொழிற்சாலைகள் உள்பட பல்வேறு பணிகளுக்கு அனுமதி கொடுத்துள்ளளது.

எனினும் இயல்பு நிலை திரும்ப வேண்டும் எனில் முழுயைமாக ஊரடங்கு தளர்த்தப்பட வேண்டிய நிலைதான் தமிழகத்தில் உள்ளது. இந்த சூழலில் ரேஷன் கார்டு இருந்தால் கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 வரை தனிநபர் கடன் பெறலாம் என்று தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவின் படி கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறும் வசதி எளிமையாக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

Related posts

Leave a Comment