100 நாள் வேலை திட்டம் – அடுத்த 3 மாதங்களுக்கு கூலியை வீடுகளுக்கே சென்று வழங்க முதல்வர் உத்தரவு

சென்னை: 100 நாள் வேலைதிட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு கூலியை வீடுகளுக்கே சென்று வழங்கிட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் 35 லட்சம் பேர் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் தங்கள் கூலியை வங்கிகளுக்கு சென்று பெற்றுக் கொள்கிறார்கள்.

தற்போது கொரோனா ஊரடங்கால் வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் பேருந்துகளும் இயங்காததால் வங்கி சென்று பணம் எடுக்க முடியாத சூழல் நிலவுகிறது. இதையடுத்து அடுத்த 3 மாதங்களுக்கு கூலியை வீடுகளுக்கே சென்று வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

அவர் கூறுகையில் வங்கி அதிகாரிகள் மூலம் அடுத்த 3 மாதங்களுக்கு தொழிலாளர்களுக்கு வீடுகளுக்கே சென்று வழங்கப்படும். நோய் குறையும் வரை அடுத்த 3 மாதத்திற்கு இதே நடைமுறை தொடரும் என அவர் தெரிவித்தார்.

Related posts

Leave a Comment