கொரோனாவுக்கு நடுவில் நிறைய துட்டு சம்பாதித்த ஒரே இந்திய வீரர்.. உலக அளவில் 66வது

நியூயார்க் : 2020ஆம் ஆண்டு உலக அளவில் அதிகம் சம்பாதித்த முதல் நூறு விளையாட்டு வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை. இந்தப் பட்டியலில் ஒரே ஒரு இந்திய விளையாட்டு வீரர் மட்டுமே இடம் பெற்றுள்ளார். அவர் வேறு யாருமல்ல. இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தான். கடந்த ஆண்டை விட 34 இடங்கள் முன்னேறி இருக்கிறார்.

அதிகம் சம்பாதித்த விராட் கோலி கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த இரண்டு மாதங்களில் எந்த கிரிக்கெட் போட்டியும் நடைபெறவில்லை. பெரிதாக விளம்பர வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. அப்படி இருந்தும் கடந்த ஆண்டை விட சுமார் 8 கோடி அதிகம் சம்பாதித்துள்ளார் விராட் கோலி.

ஃபோர்ப்ஸ் பட்டியல் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வருடா வருடம் பல்வேறு பணக்காரர்கள் பட்டியல்களை வெளியிட்டு வருகிறது. அதில் பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியல் கடந்த 2019 ஜூன் 1 முதல் 2020 ஜூன் 1 வரையிலான காலகட்டத்தில் பெற்ற வருமானத்தை கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது.

ரோஜர் பெடரர் இந்த ஆண்டு டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் முதல் இடத்தை பிடித்துள்ளார். அவர் கடந்த ஓராண்டில் சுமார் 803 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி உள்ளார். இந்த பட்டியலில் இடம் பெறும் முதல் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் என்பது குறிப்பிடத்தக்கது.

கால்பந்து வீரர்கள் கடந்த ஆண்டு முதல் இடத்தில் இருந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ 793 கோடியுடன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அடுத்த இரு இடங்களில் கால்பந்து வீரர்கள் லியோனல் மெஸ்ஸி மற்றும் நெய்மர் இடம் பெற்றுள்ளனர்.

முதல் 20 இடங்கள் முதல் 20 இடங்களில் பெரும்பாலும் அமெரிக்காவை சேர்ந்த பிரபல கூடைப்பந்து வீரர்கள், ரக்பி வீரர்களே அதிகம் இடம் பெற்றுள்ளனர். கோல்ஃப் வீரர் டைகர் வுட்ஸ் எட்டாம் இடம் பெற்றுள்ளார். கார் பந்தய வீரர் லெவிஸ் ஹேமில்டன் 13ஆம் இடம் பிடித்துள்ளார்.

கிரிக்கெட்டில் ஒருவர் மட்டுமே கிரிக்கெட் விளையாட்டில் இந்தியாவின் விராட் கோலி மட்டுமே முதல் நூறு இடங்களில் இடம் பெற்றுள்ளார். ஒட்டு மொத்தமாக இந்தியாவில் அவர் ஒருவர் மட்டுமே அந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டை விட பெரிய அளவில் முன்னேறி இருக்கிறார் அவர்.

முன்னேற்றம் 2019ஆம் ஆண்டு இதே பட்டியலில் 188 கோடியுடன் நூறாவது இடத்தில் இருந்தார் கோலி. தற்போது 196 கோடி வருமானத்துடன் 66வது இடத்தை பிடித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத பட்சத்தில் அவர் மேலும் அதிக வருமானம் எட்டி இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment