தோனி தான் பெஸ்ட் கேப்டன்.. அதை சொன்னா சில பேருக்கு கஷ்டமா இருக்கும்.. போட்டு உடைத்த கிர்மானி!

மும்பை : இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சையது கிர்மானி, கேப்டனாக தோனி வைத்திருக்கும் சில சாதனைகளை வேறு எந்த கேப்டனும் வைத்திருக்கவில்லை என அதிரடியாக கூறி உள்ளார்.

சையது கிர்மானி 1983 உலகக்கோப்பை வென்ற அணியில் ஆடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கபில் தேவ், சுனில் கவாஸ்கர், பிஷன் சிங் பேடி உள்ளிட்ட சிறந்த முன்னாள் கேப்டன்களின் கீழ் ஆடியவர்.

உலகிலேயே சிறந்த கேப்டன் இந்திய அணியின் சிறந்த கேப்டன்கள் வரிசையில் நிச்சயம் தோனிக்கு இடம் உண்டு. ஆனால், தோனி இந்திய அணியில் மட்டுமின்றி, உலகிலேயே சிறந்த கேப்டன் என சையது கிர்மானி கூறி உள்ளார். அதற்கு காரணம், அவர் செய்த சாதனைகள் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணி இந்திய அணி 1970களில் வெளிநாடுகளில் சில குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து 1983இல் கபில் தேவ் தலைமையில் உலகக்கோப்பை ஆடச் சென்ற இந்திய அணி கோப்பை வென்று வந்து மாபெரும் சாதனை செய்தது.

கபில் தேவ் கபில் தேவ் உலகக்கோப்பை வெற்றி மட்டுமில்லாமல் தலைமைப் பொறுப்பில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்திய கேப்டன். அவருக்கு அடுத்து அசாருதீன் கேப்டன்சியில் நீண்ட காலம் இடம் பெற்றார். ஆனால், அவரால் அதிக வெற்றிகளை குவிக்க முடியவில்லை.

கங்குலி என்ன செய்தார்? அடுத்து கங்குலி மோசமாக காட்சி அளித்த இந்திய அணியை இளம் வீரர்களை கொண்டு மாற்றி அமைத்தார். இந்திய அணியை முன்னணி அணிகள் எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற நிலையை கங்குலி ஏற்படுத்தினார். டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியில் சிறந்த வீரர்களை உருவாக்கினார்.

உலகக்கோப்பை வெற்றி அதன் பின் தோனி தான் இந்திய அணியை அடுத்தகட்டத்திற்கு அழைத்துச் சென்றார். தோனி கேப்டனாக நியமிக்கப்பட்ட உடனேயே 2007 டி20 உலகக்கோப்பை வென்றது இந்திய அணி. அவரது தலைமையில் டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தது.

சாதனைகள் தொடர்ந்து 2011 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை வென்றது இந்திய அணி. அது உச்சகட்ட சாதனையாக அமைந்தது. தொடர்ந்து சாம்பியன்ஸ் ட்ராபி தொடரையும் வென்றது இந்தியா. அந்த வகையில் தோனி பல முக்கிய தொடர் வெற்றிகளை பெற்றுக் கொடுத்த கேப்டனாக இருக்கிறார்.

தோனி எல்லோருக்கும் மேல் இந்த நிலையில், தோனி பற்றி ஒரு பேட்டியில் பேசிய சையது கிர்மானி, நான் ஆடிய கேப்டன்கள், எதிரணி கேப்டன்கள் ஆகிய எல்லோருக்கும் உரிய மரியாதை அளித்து இதை சொல்கிறேன். தோனி எல்லோருக்கும் மேல். தோனி வைத்திருக்கும் சில சாதனைகளை வேறு யாரும் வைத்திருக்கவில்லை என்றார்.

காயப்படுத்தக் கூடும் மேலும், நான் இதை மரியாதையுடன் சொல்லிக் கொள்கிறேன். ஏனெனில், நான் ஆடிய கேப்டன்களை இது காயப்படுத்தக் கூடும் என்றார். ஆனால், இதுதான் உண்மை. அவர்கள் அதை ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும். சில உண்மைகளை பலரும் ஒப்புக் கொள்ள மறுப்பார்கள் எனவும் கூறி உள்ளார் கிர்மானி.

கெவின் பீட்டர்சன் சில வாரங்கள் முன்பு முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் உலகத்திலேயே தோனி தன் சிறந்த கேப்டன் என கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் நூறு கோடிக்கும் மேற்பட்ட ரசிகர்களின் எதிர்பார்ப்பால் ஏற்படும் அழுத்தத்தை சமாளித்து தோனி கேப்டனாக சாதனைகள் செய்ததால் அவரை சிறந்த கேப்டன் என அவர் கூறி இருந்தார்.

Related posts

Leave a Comment