Rajapalayam Dmk News

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 97 வது பிறந்த நாளை முன்னிட்டு இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினரின் 44,45,46,47,48 வது ஊதியத்தில் 5,25,000 ரூபாய் மதிப்பீட்டில் இராஜபாளையம் நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் (2000 நபர்கள்) கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்படவுள்ளது இதில் முதல் கட்டமாக இராஜபாளையம் நகர கழக நிர்வாகிகளுக்கு ஒன்றிய கழக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு KKSSR.இராமச்சந்திரன் MLA அவர்கள் அரிசி ரவை கோதுமை அடங்கிய பைகளை இன்று (31.05.2020) வழங்கினார். இந்நிகழ்வில் கூறிய மாவட்ட செயலாளர் அவர்கள் திமுக தலைவர் அன்பு தளபதியார் அவர்கள் கூறியதுபோல் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை அனைத்து கிளை மற்றும் வார்டுகளில் கலைஞர் அவர்களின் திருஉருவ படத்தை வைத்து மலர் தூவி மரியாதை செய்தும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்தும் கொண்டாடுமாறு தொண்டர்களிடையே கேட்டுக் கொண்டார். மேலும் இந்நிகழ்வில் இளந்திரைகொண்டான் ஊராட்சி பஞ்சம்பட்டி கிராமத்தில் கடந்த வாரம் பெய்த மழையில் வீடு இடிந்த மு.சுப்பையா என்ற பயனாளிக்கு ரூபாய் 5000 ஐ நிதி உதவியாக வழங்கினார். இந்நிகழ்வில் நமது மக்கள் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் தனுஷ் எம்.குமார் MP அவர்கள் இராஜபாளையம் ஒன்றிய சேர்மன் G.சிங்கராஜ் அவர்கள் Ex.MLA தனுஷ்கோடி அவர்கள் தெற்கு மாவட்ட துணை செயலாளர் ராசா அருண்மொழி அவர்கள் நகர செயலாளர் ராமமூர்த்தி அவர்கள் பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் அவர்கள் மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி அவர்கள் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன் அவர்கள் ஷியாம் ராஜா அவர்கள் மணிகண்ட ராஜா அவர்கள் ஒன்றிய துணை சேர்மன் துரை கற்பகராஜ் மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி கவுன்சிலர்கள் பூமாரி மாரிமுத்து தொந்தியப்பன் அரிராம்சேட் ஒன்றிய அவைத்தலைவர் மிசா நடராஜன் பொருளாளர் காந்தி பேரூர் செயலாளர் இளங்கோவன் இளைஞர் அணி சுரேஷ் சிவக்குமார் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment