இசைஞானி இளையராஜாவுக்கு பிறந்தநாள்.. சமூக வலைதளங்களில் பிரபலங்கள் வாழ்த்து மழை!

சென்னை: இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் அவருக்கு சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் 1943ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் தேதி பிறந்தார் இளையராஜா. ஆனால் தமிழகத்தின் முன்னாள் முதல்வரான மு. கருணாநிதியின் பிறந்தநாளும் ஜூன் 3ஆம் தேதி என்பதால், அவர் மீது கொண்ட மரியாதையின் பேரில் தனது பிறந்தநாளை ஜூன் 2ம் தேதியே கொண்டாடி வருகிறார்.

அதன்படி அவரது பிறந்தநாளான இன்று திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தேவிஸ்ரீ பிரசாத்

இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், இசைஞானி இளையராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் இளையராஜா சாரின் பிறந்த நாள், இசை பிரியர்களுக்கெல்லாம் திருவிழா. இதனை முன்னிட்டு இன்ஸ்ருமென்டல் பர்ஃபார்மன்ஸ் வழங்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

நடிகர் உதயா

இதேபோல் நடிகர் உதயா பதிவிட்டுள்ள டிவிட்டில், என் முதல் படம் “திருநெல்வேலி “இசைஞானி இசையில்.என் பாக்கியம்.என் மூன்றாவது படம் இசைஞானி இசையில் கஸ்தூரிராஜாவின் இயக்கத்தில் காதல் சாதி எனக்குப் பெருமை.. இசையின் ராஜாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா.. என பதிவிட்டுள்ளார்.

நடிகர் மனோஜ்

இதேபோல் நடிகர் மனோஜ் பிறந்த நாள் வாழ்த்துகள் இளையராஜா அங்கிள் என பதிவிட்டுள்ளார். மேலும் இளையராஜாவுடன் தனது குடும்பத்தினர் எடுத்த போட்டோக்களை எல்லாம் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் மனோஜ்.

இயக்குநர் மோகன் இதேபோல் வண்ணாரப்பேட்டை மற்றும் திரௌபதி படத்தின் இயக்குநரான மோகனும் இசைஞானி இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் #இசைஞானி அவர்களுக்கு.. என பதிவிட்டுள்ளார்.

Related posts

Leave a Comment