சி.ஐ.டி.யூ., முற்றுகை

விருதுநகர், ஜூன் 1- –

ஊரடங்கில் போக்குவரத்து ஊழியர்களுக்கு சிறப்பு விடுப்பு கொடுத்தும் மார்ச், ஏப்ரலில் ஊதியம் வழங்கவில்லை, தற்போது மே மாத ஊதியத்திற்கு இருப்பில் உள்ள விடுப்பை கழிக்கப்படும் எனவும், விடுப்பு இல்லையென்றால் ஊதிய பிடித்தம் செய்யப்படும் என அரசு அறிவித்தது.இதைக் கண்டித்து சி.டி.ஐ.யூ., தொழிற்சங்கம் சார்பில் விருதுநகர் போக்குவரத்து பணிமனை முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது. சம்மேளன தலைவர் வெள்ளதுரை தலைமை வகித்தார். பொதுமேலாளர் சிவலிங்கம் பேச்சுவார்த்தை நடத்தினர். மண்டல நிர்வாகிகள் சுந்தரராஜன், வேலுச்சாமி கலந்து கொண்டனர்.ஸ்ரீவில்லிபுத்துார்: அரசு பஸ் பணிமனை முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு நிர்வாகி வைரமுத்து தலைமை வகித்தார். கிளை மேலாளர் ரவிசந்திரனிடம் சங்க நிர்வாகிகள் சோமசுந்தரம், ஜான்பிரிட்டோ, ஆழ்வார், ராமசாமி மனு அளித்தனர்.

Related posts

Leave a Comment