அடிப்படை வசதிகளுக்காக ஏங்கும் மக்கள்

விருதுநகர்:தெருவிளக்கு, ரோடு, வாறுகால் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் விருதுநகர் கலைஞர் நகர் மக்கள் அவதிப்படுகின்றனர்.

பாவாலி ஊராட்சிக்கு உட்பட்ட இந்நகரில் அடிப்படை வசதிகள் இல்லை. தெருவிளக்குகள் எரியாததால் இருளிலே தவிக்கின்றனர். வாறுகால் வசதி இல்லாததால் கழிவுநீர் ரோட்டிலே தேங்கி சுகாதார கேட்டை ஏற்படுத்துகிறது.தெரு நாய்கள் சுற்றி திரிவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மாதத்திற்கு இரு முறை தான் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. மேட்டுப்பட்டியில் குடிநீர் உவர்ப்பாக இருப்பதால் உபயோகிக்க முடியவில்லை.

தாமிரபரணி குடிநீர் கேட்டு மக்கள் போராடி வருகின்றனர்.குழாய்கள், குடிநீர் தொட்டகளை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தால் மட்டுமே குடிநீர் பிரச்னையை ஓரளவு தீர்க்க முடியும். ரோடுகள் குண்டும் குழியுமாக இருக்கிறது. தரைப்பாலம் ஓட்டை விழுந்து விபத்து ஏற்படுத்துகிறது.

போலீஸ் பாலம் அருகே நீர்வரத்து கால்வாயில் புதர்மண்டி கிடக்கிறது. அருகே தேங்கி கிடக்கும் குப்பையால் துர்நாற்றம் வீசுகிறது. அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர ஊராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.நாய்த்தொல்லை தாங்கல…சொரி பிடித்த, நோய்ப்பட்ட நாய்கள் சுற்றி திரிவதால் குழந்தைகள் வெளியே நடமாட அஞ்சுகின்றனர்.

சமீபத்தில் இவ்வழியே இளைஞர் வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் போது நாய்கள் சண்டையிட்டதில் அவரது வாகனம் குறுக்கே விழுந்து விபத்தை ஏற்படுத்தியது. இதில் அவருக்கு காயங்கள் ஏற்பட்டன. இது போல் அடிக்கடி நடக்கிறது. நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

.மகாலிங்கம், கூலித்தொழிலாளி.

உவர்க்கும் குடிநீர்

மேட்டுப்பட்டியில் வினியோகிக்கப்படும் குடிநீர் உவர்க்கிறது. இதனால் சிறுநீரக உபாதைகள் வந்து விடுமோ என அஞ்சுகிறோம். குடிநீரை விலைக்கு வாங்கும் அளவுக்கு வசதி இல்லை. தாமிரபரணி குடிநீர் திட்டத்தை கலைஞர் நகருக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும்.

ஆராயி, குடும்பத்தலைவி.

நடவடிக்கை எடுக்கப்படும்

தெருவிளக்குகள் எரிய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். பிற அடிப்படை வசதிகள் தொடர்பாக நிதி அறிக்கை சமர்ப்பித்துள்ளோம். நிதி வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ராதாதேவி, ஊராட்சி தலைவர்.

Related posts

Leave a Comment