கழுத்தை நெறிக்கும் நிதி நிறுவனங்கள் மூச்சு விட முடியாமல் திணறும் மக்கள்

விருதுநகர்:விருதுநகரில் வாங்கிய கடனை செலுத்த மத்திய அரசு அவகாசம் கொடுத்தம் கழுத்தை நெறிக்கும் வங்கிகள், நிதி நிறுவனங்களால் பொதுமக்கள் திணறுகின்றனர்.

ஊரடங்கால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளே முடங்கினர். எந்த தொழிலும் முழுவீச்சில் செயல்படவில்லை. இந்நிலையில் மத்திய அரசால் இ.எம்.ஐ., செலுத்த முதலில் மூன்று தற்போது மூன்று என ஆறு மாதத்திற்கு செலுத்த வேண்டாம் என அறிவித்தது.

இந்நிலையில் தற்போது தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் கடனை செலுத்த நெருக்கடி கொடுக்கின்றன. சில நிறுவனம் டூவீலர்களை பறிப்பதும் தொடர்கிறது. இதனால் அப்பாவி மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கும் ஆளாகி உள்ளனர்.கலெக்டர் கண்ணன் : ஊரடங்கு நேரத்தில் நெருக்கடி தருவதை தவிர்க்க வேண்டும். நெருக்கடி தரும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் , என்றார்.

Related posts

Leave a Comment