இளையராஜாவின் இசையில் பாடிய ஒவ்வொரு பாடலும் பொக்கிஷம்.. அசத்தலாய் வாழ்த்து சொன்ன சின்னக்குயில்!

சென்னை: இசைஞானி இளையராஜா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பிரபல பின்னணி பாடகியான சித்ரா அசத்தலாய் வாழ்த்து கூறியுள்ளார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் இளையராஜா.

பத்ம விருதுகள்

இசைக்கு அவர் ஆற்றிய சேவையை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு இளையராஜாவுக்கு பத்மபூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகளை வழங்கியுள்ளது. இளையராஜா தனது படங்களுக்காக ஏராளமான தேசிய விருதுகளையும் குவித்திருக்கிறார்.

77வது பிறந்தநாள்

அது மட்டுமின்றி தமிழக அரசின் விருது, கேரள அரசின் விருது, சர்வதேச விருதுகள் என அள்ளி குவித்திருக்கிறார். இந்நிலையில் இன்று தனது 77வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு அவருக்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சித்ரா வாழ்த்து அந்த வகையில் பிரபல பின்னணி பாடகியான சின்னக்குயில் சித்ரா, இசைஞானி இளையராஜாவுக்கு பேஸ்புக் வாயிலாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இளையராஜா சாரிடம் ஒவ்வொரு பாடலும் தனக்கு நல்ல பயிற்சியாகவும் தன்னுடைய பயணத்தில் ஒரு பொக்கிஷமாகவும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மல்லிகையே மல்லிகையே.. மேலும் இளையராஜா சார் ஒரு குறையும் இல்லாமல், நல்ல ஆயுள், ஆரோக்கிய, சவுக்கியத்துடன் சீரும் சிறப்புமாய் நமக்கு நல்ல இசையை வழங்கி குடும்பத்துடன் நலமாய் இருக்க வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் பெரிய வீட்டு பண்ணைக்காரன் படத்தில் இருந்து மல்லிகையே மல்லிகையே தூதாகப்போ.. என்ற பாடலை பாடி தனது காணிக்கை என்றும் கூறியுள்ளார் சித்ரா.

Related posts

Leave a Comment