அந்த வலி எனக்கும் தெரியும்.. இறந்த அம்மாவை எழுப்பிய குழந்தைக்கு உதவிய பிரபல நடிகர்!

சென்னை: ரயில்வே ஸ்டேஷனில் தனது தாய் இறந்ததது தெரியாமல் எழுப்பிக் கொண்டிருந்த குழந்தைக்கு பிரபல நடிகரான ஷாருக் கான் உதவிக்கரம் நீட்டியிருக்கிறார்.

கொரோனா லாக்டவுனால் பல தொழிற்சாலைகளும் நிறுவனங்களும் பல நாட்களாக மூடப்பட்டுள்ளன. சிறுகுறு தொழில் முற்றிலும் முடங்கியிருக்கிறது.

23 வயது தாய் அப்படி செல்லும் தொழிலாளர்கள் பல பசி பட்டினி என இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த வாரம் குஜராத்திலிருந்து ரயில் மூலம் பீகார் மாநிலம் கட்டிஹாருக்கு செல்ல 23 வயது தாய், அவரது குழந்தை, உள்பட சில குடும்ப உறுப்பினர்கள் ரயிலில் பயணித்தனர்.

ரயிலில் உயிரிழந்த தாய்

அப்போது அந்த 23 வயது பெண்ணுக்கு வழியில் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ரயிலிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார் அந்த இளம் தாய். இதையடுத்து அவரது உடல் முசாபர்பூர் ரயில் நிலையத்தில் கிடத்தி வைக்கப்பட்டிருந்தது.

ஷாருக் கான் உதவி

தாய் இறந்ததை அறியாத அவரது 2 வயது குழந்தை அவர் மீது போர்த்தப்பட்டிருந்த துணியை இழுத்து அவரை எழுப்ப முயன்றது. இதுதொடர்பான வீடியோக்களும் போட்டோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி கண்கலங்க செய்தது. இந்நிலையில் அந்த குழந்தைக்கு பாலிவுட் நடிகரான ஷாருக் கான் தனது மீர் ஃபவுன்டேஷன் மூலம் உதவியுள்ளார்.

அந்த வலி எனக்கு தெரியும் மேலும் இதுதொர்பாக டிவிட்டியுள்ள அவர், அந்த சிறுவனுக்காக எங்களை தொடர்பு கொண்ட அனைவருக்கும் நன்றி. பெற்றோரின் இழப்பை தாங்கும் வலிமை அவனுக்கு கிடைக்க அனைவரும் பிரார்த்தனை செய்வோம். அந்த வலி எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியும். எங்கள் அன்பு மற்றும் ஆதரவு எப்போதும் அவனுக்கு உண்டு என பதிவிட்டுள்ளார்.

பாராட்டு ஷாருக்கானின் இந்த பதிவை 40 ஆயிரம் பேர் வரை லைக்ஸ் செய்துள்ளனர். 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரீடிவிட் செய்துள்ளனர். பெரும்பாலான நெட்டிசன்கள், கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் உண்டு தெரிவித்துள்ளதோடு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

Related posts

Leave a Comment