‘ஷாக் ‘: எகிறிய மின் கட்டணத்தால் நுகர்வோர்

காரியாபட்டி:விருதுநகரில் வீட்டு உபயோக மின் கட்டணத்தை கூடுதலாக வசூலித்து நுகர்வோருக்கு வாரியம் ‘ஷாக்’ கொடுத்தது.

ஊரடங்கை முன்னிட்டு வீட்டு உபயோக மின் கட்டணத்தை செலுத்த அரசு அவகாசம் வழங்கியது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் இந்த முறை எடுத்த ரீடிங்குடன் கடந்த முறை எடுத்த ரீடிங்கை சேர்க்கின்றனர். மொத்த யூனிட்டை இரண்டாகப் பிரித்து கடந்த முறை செலுத்திய மின் கட்டணத்தை கழித்து மீதமுள்ள யூனிட்டை கணக்கிட்டு வசூலிக்கின்றனர்.

உதாரணத்திற்கு 500 யூனிட்டுக்கு மேல் இருக்கும் பட்சத்தில் ஒரு யூனிட்டுக்கு ரூ. 6.60 கட்டணம் செலுத்த வேண்டும். 100 யூனிட்டுக்குள் சிக்கனமாக பயன்படுத்தி கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்கள் கூட அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நெஞ்சு வலிக்குது

இரண்டு முறை எடுக்க வேண்டிய ரீடிங்கை சேர்த்து எடுத்ததால் யூனிட் அதிகரித்து கட்டணம் எகிறியது. உணவுக்கே வழியில்லாத எளியோர் கூடுதல் மின் கட்டணத்தை எப்படி செலுத்த முடியும். மக்கள் நலன் கருதி மின்சாரத்தை 100 யூனிட்டிற்கு குறைவாக பயன்படுத்தும் நுகர்வோரிடம் கட்டணம் வசூலிப்பதை நிறுத்தி, அனைத்து யூனிட்களுக்கும் குறைந்த கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related posts

Leave a Comment