கருணாநிதி பிறந்த நாள்: ஸ்டாலின் மரியாதை

சென்னை: தி.மு.க. முன்னாள் தலைவர் மறைந்த கருணாநிதி பிறந்த நாளையொட்டி இன்று நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாளையொட்டி தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடம் சென்று மலரஞ்சலி செலுத்தினார். அவருடன் துரைமுருகன், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் மரியாதை செலுத்தினர்.
பின்னர் 97 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை ஸ்டாலின் நடத்தி வைத்தார்.

Related posts

Leave a Comment