கிளை நூலகங்களை மீண்டும் திறக்க வலியுறுத்தல்

அருப்புக்கோட்டையில் 32 ஊராட்சிகளில் 2011 தி.மு.க., ஆட்சியில் கிராம நுாலகங்கள் திறக்கப்பட்டன. அவற்றில் கோபாலபுரம், பாலவநத்தம், ஆத்திபட்டி, கோயிலாங்குளம் உள்ளிட்ட பெரும்பாலானவை பராமரிப்பின்றி மூடப்பட்டன.

ஊரடங்கிற்கு கிளை நுாலகங்களும் தப்பவில்லை.கிராம மற்றும் கிளை நுாலகங்களுக்கு வரும் பள்ளி, கல்லுாரி மற்றும் அரசு வேலைக்கான போட்டி தேர்வு எழுதுவோர் நலன் கருதி மூடப்பட்ட கிராம நுாலகங்களை புனரமைக்கவும், ஊரடங்கு தளர்வால் கிளை நுாலகங்களை மீண்டும் திறக்கவும் மாவட்ட நுாலக நிர்வாகம் முயற்சிக்க வேண்டும், என வாசகர்கள் வலியுறுத்தினர்.

Related posts

Leave a Comment