குடிநீர், மின்சாரம் இன்றி தவிப்பு

நரிக்குடி:நரிக்குடியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மின் பற்றாக்குறையால் கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன.

இங்கு கொட்டகாச்சியேந்தல், கீழக் கொன்றைகுளம், டி. கடம்பன்குளம், இருஞ்சிறையில் நிலத்தடி நீர் உப்பாக உள்ளது. இதனால் திருப்பாச்சி குடிநீர் திட்டம் அமலானது. சரிவர தண்ணீர் சப்ளை இல்லை. தாமிரபரணி குடிநீர் திட்டம் கொண்டு வந்தும் பயனில்லை. குடிநீரை விலைக்கு வாங்குகின்றனர். மற்ற பயன்பாட்டிற்கும் தண்ணீர் இல்லை.

நரிக்குடியில் நல்ல தண்ணீர் இருக்கும் இடத்தை அறிந்து ஆழ்துளை அமைத்து குடிநீர் சப்ளை செய்ய வலியுறுத்தினர்.மின் வசதியில்லாததால் தெருவிளக்குகள் எரியாமல் கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன. வீடுகளுக்கு பற்றாக்குறை மின்சாரம் கிடைப்பதால் மின்சாதன பொருட்களை இயக்க முடியவில்லை. சிவகங்கையில் இருந்து மின் சப்ளை செய்வதால் பற்றாக்குறை நிலவுகிறது. அதிகாரிகளிடம் புகார் கூறியும் நடவடிக்கை இல்லை. தடையில்லா மின்சாரம் கிடைக்க நடவடிக்கை தேவை.

Related posts

Leave a Comment