விலையின்றி வாடும் செண்டு பூக்கள்

சூலக்கரை:ஊரடங்கில் எளிய முறையில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதால் செண்டு பூக்கள் விலையின்றி வாடுகின்றன.

விருதுநகரில் மெட்டுக்குண்டு, ஆலங்குளம், ராஜபாளையம், தளவாய்புரம், எரிச்சநத்தம், ஸ்ரீவில்லிப்புத்துார், வத்திராயிருப்பு ஆகிய பகுதிகளில் கிணற்று நீர் பாசனம் மூலம் செண்டு பூ விவசாயம் நடக்கிறது. 70 நாளில் நாட்டு செண்டு பூ விளையும். 40 நாளில் விளையும் ‘பென்ஸ்டால்’ வீரிய ஒட்டு ரகத்தையே தேர்வு செய்கின்றனர்.

இவற்றை முகூர்த்த மாதங்களை கணக்கிட்டு சாகுபடி செய்கின்றனர். மே, ஜூன் கோடை வறட்சியால் மகசூல் பாதிக்கிறது. தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் சுப நிகழ்ச்சிகள் எளிமையாக நடத்தப்படுகிறது. வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் செண்டு பூ விலையின்றி வாடுகிறது. விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

Related posts

Leave a Comment