கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய அழைப்பு

விருதுநகர்:தேசிய கால்நடை இயக்கம் திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு மானியத்துடன் காப்பீடு செய்து பயன்பெற கலெக்டர் கண்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.

அவரது செய்தி குறிப்பு: கால்நடை பராமரிப்புத்துறை மூலம் 2,500 கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் இருந்தால் 70 சதவீதம் , மேல் இருந்தால் 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். 2 அரை முதல் 8 வயது கறவை மாடுகள், எருமைகள், 1 முதல் 3 வயது வெள்ளாடுகள், செம்மறியாடுகள், 1 முதல் 5 வயது வெள்ளை பன்றிகளுக்கு காப்பீடு செய்யப்படும். அதிகபட்சமாக ரூ.35 ஆயிரம் வரை காப்பீடு செய்யலாம்.

ஓராண்டு கட்டணமாக கால்நடை மதிப்பில் 2 சதவீதம், 3 ஆண்டு கட்டணமாக 5 சதவீதம் நிர்ணியக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தில் 5 கால்நடைகளுக்கு காப்பீடு செய்யலாம். கால்நடை மருந்தகத்தை அணுகி பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment