அரசு பஸ்களில் நெரிசல்

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துாரில் பயணிகள் அதிகளவு வருவதால் அரசு பஸ்களில் சமூக இடைவெளி கேள்விக்குறியானது.

ஊரடங்கு தளர்வால் நேற்று முன்தினம் முதல் அரசு பஸ்கள் 60 சதவீத பயணிகளுடன் இயக்கப்படுகின்றன. சமூக இடைவெளி, முகக்கவம் அணிந்து பயணிக்க அரசு உத்தரவிட்டது. ஸ்ரீவில்லிப்புத்துாரில் இருந்து நேற்று பல்வேறு பகுதிகளுக்கு புறப்பட்ட பஸ்களில் பயணிகள் அதிகளவு ஏறினர்.

கூடுதல் பயணிகளை ஏற்ற மறுத்த கண்டக்டர், டிரைவருடன் பயணிகள் தகராறில் ஈடுபட்டனர். வேறு வழியின்றி பஸ்சில் நின்று கொண்டே பயணித்தனர். இதை தவிர்க்க விருதுநகர், திருமங்கலத்துக்கு தனியாக பஸ்களை இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.

Related posts

Leave a Comment