‘சைக்கிள் ஓட்டினால் மாரடைப்பு வராது’: இன்று, உலக சைக்கிள் தினம்!

கோவை:”ஒரு மனிதனுக்கு உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமோ, அது போல் ‘சைக்கிளிங்’ செய்வதும் முக்கியம்,” என்று கோவை அரசு மருத்துவமனை டீன் காளிதாஸ் கூறினார்.

‘தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முன், சைக்கிள் தான் போக்குவரத்துக்கு முக்கிய சாதனமாக இருந்தது. சைக்கிளை பயன்படுத்தும் போது, மனிதன் ஆரோக்கியமாக இருந்தான்.டூவீலர், கார் உள்ளிட்ட புதிய வாகனங்களின் வருகையால், சைக்கிள் பயன்பாட்டை மட்டுமல்ல, மனிதன் தன் ஆரோக்கியத்தையும் இழந்து விட்டான். இன்று உடல்நலம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், சைக்கிள் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இளைஞர்கள் விதம் விதமான சைக்கிள்கள் பயன்படுத்தி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி வருகின்றனர்.

இருதய நோய் நிபுணர் டாக்டர் பாலாஜி கூறுகையில், ”சைக்கிளிங் செய்வதன் மூலம், கால் பாதத்திலிருந்து, மூளை வரை உடலின் அத்தனை உறுப்புகளும் இயங்கும். குறிப்பாக, இருதய துடிப்பு சீராக இருக்கும். டாக்டர் ஆலோசனை பெற்று, தொடர்ந்து, சைக்கிளிங் செய்து வந்தால், உடல் கொழுப்பு, ரத்த கொதிப்பு, மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் அண்டாது. இன்றைய குழந்தைகளிடம் உடற்பயிற்சி பழக்கம் குறைந்து விட்டது. இதை தவிர்த்து, தினமும் அரை மணி முதல் ஒரு மணி நேரம் சைக்கிளிங் செய்ய, அவர்களை ஊக்குவிக்க வேண்டும்,” என்றார்.

ஒரு மனிதனுக்கு உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமோ, அது போல் ‘சைக்கிளிங்’ செய்வதும் முக்கியம். சைக்கிள் ஓட்டுவதன் மூலம், உடலில் உள்ள கொழுப்புகள் குறையும். ரத்த ஓட்டம் சீராக இருக்கும். தொடர்ந்து, சைக்கிளிங் பயிற்சி செய்வதன் மூலம், இதயத்தில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் சீராகும்.-காளிதாஸ்டீன், கோவை அரசு மருத்துவமனை.

Related posts

Leave a Comment