‘உயிர்தான் முக்கியம்’: பத்திரிகையாளர்களுக்கு முதல்வர் அறிவுரை

சென்னை: ”உயிர்தான் முக்கியம்; எனவே, முகக் கவசம் அணியுங்கள்,” என, பத்திரிகையாளர்களுக்கு, முதல்வர் இ.பி.எஸ்., அறிவுரை வழங்கினார்.

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில், ஆய்வு கூட்டம் முடிந்த பின், முதல்வர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, செய்தியாளர்கள் சிலர், முகக் கவசம் அணியாமல் இருப்பதைக் கண்டார்.

அவர்களிடம், ”அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். உயிர்தான் முக்கியம். உயிருக்கு பின்தான் தொழில் என்பதை தெரிந்து பணியாற்றுங்கள்,” என, முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.

Related posts

Leave a Comment