சிதைந்த பாலங்களால் வாகன ஓட்டிகள் ‘திக்திக்’ பயணம்

ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலங்கள் பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருவதால் அடிக்கடி விபத்து நடக்கிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு பணி மனை அருகே பாலத்தின் தடுப்ப சுவர் போதிய உயரமின்றி உள்ளதால் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. கூட்டுறவு மில், பூவாணி விலக்கிலுள்ள பாலங்களில் தடுப்பு சுவர்கள் உடைந்துள்ளன. ஆண்டுகள் பல கடந்தும் பராமரிக்கவில்லை. நத்தம்பட்டி மெயின் ரோட்டில் வளைவில் உள்ள பாலமும் பராமரிப்பின்றி வாகன ஓட்டிகளை அச்சுறுத்திறுத்தி வருகிறது.

பாலங்களின் அவலம் குறித்து உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு தெரிந்ததால் விபத்தில் சிக்காமல் கவனமாக செல்கின்றனர். வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கின்றனர். பெரும் விபத்து ஏற்பட்டு உயிர்களை காவு வாங்கும் முன் பாலங்களை பராமரிக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.

விரைவில் பணிகள் துவங்கும்பாலத்தின் தடுப்புச்சுவர்களை சீரமைக்கும் பணிக்கான மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பாலங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Related posts

Leave a Comment