அணியோட சிறப்பான நாயகன் அவர்… ராகுல் டிராவிட் குறித்து விவிஎஸ் லஷ்மன் புகழ்ச்சி

டெல்லி : இந்திய அணியின் சிறப்பான நாயகனாக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் திகழ்ந்ததாக முன்னாள் வீரர் விவிஎஸ் லஷ்மன் தெரிவித்துள்ளார். தன்னுடன் இணைந்து விளையாடிய வீரர்கள் குறித்தும் அவர்களது பிரத்யேக திறமைகள், குணநலன்கள் குறித்தும் முன்னாள் வீரர் விவிஎஸ் லஷ்மன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கடந்த சில தினங்களாக பகிர்ந்து வருகிறார். சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி உள்ளிட்டவர்கள் குறித்து தன்னுடைய கருத்துக்களை தெரிவித்த விவிஎஸ் லஷ்மன், தற்போது ராகுல் டிராவிட் குறித்து தன்னுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

விவிஎஸ் லஷ்மன் கருத்து கடந்த சில தினங்களாக தன்னுடன் விளையாடிய கிரிக்கெட் வீரர்கள் குறித்த கருத்துக்களை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார் முன்னாள் வீரர் விவிஎஸ் லஷ்மன். சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி உள்ளிட்டவர்கள் வரிசையில் தற்போது ராகுல் டிராவிட் குறித்து லஷ்மன் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

விக்கெட் கீப்பராகவும் செயல் 164 டெஸ்ட் போட்டிகள், 344 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டிகளில் விளையாடி முறையே, 13,288, 10,899 மற்றும் 31 ரன்களை குவித்துள்ள முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், கடந்த 1999 முதல் 2004 வரை 73 ஒருநாள் போட்டிகளில் விக்கெட் கீப்பராகவும் இருந்து 84 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இதில் 13 ஸ்டம்பிங் மற்றும் 71 கேட்சுகள் அடங்கும்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்ட்னர்ஷிப் லஷ்மன் மற்றும் டிராவிட் இணைந்து ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மிகப்பெரிய அளவில் 376 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் எடுத்துள்ளனர். கடந்த 2001ல் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா 171 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தழுவியது.

பிரத்யேகமான மாணவர் இந்நிலையில் ராகுல் டிராவிட் குறித்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பேசியுள்ள விவிஎஸ் லஷ்மன், அணியின் சிறப்பான நாயகன் என்றும், பிரத்யேகமான மாணவர் என்று புகழ்ந்துள்ளார். மேலும் ஒவ்வொரு சவாலையும் மிகுந்த அர்ப்பணிப்புடன் செய்வார் என்றும் முடியாது என்று சொல்ல வேண்டிய சூழலிலும் விடாமுயற்சியை கைவிடாமல் செயலாற்றுவார் என்றும் லஷ்மன் தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment