சீரமைக்காது நெடுஞ்சாலை அலட்சியம்

விருதுநகர் : விருதுநகர் அல்லம்பட்டியில் இருந்து அரசு மருத்துவமனை செல்லும் ரோடு மோசமான நிலையில் உள்ளதால் இதை சீரமைக்காது நெடுஞ்சாலைதுறை அலட்சியம் காட்டுகிறது.

மாநில நெடுஞ்சாலைத்துறையின் குறுகலான ரோடான இதன் வழியில் தினசரி லாரி, பஸ்கள் என கனரக வாகனங்கள் அதிகம் பயணிக்கிறது. பாதாள சாக்கடை பணிக்காக உடைக்கப் பட்டதால் மண்மேவி பயன்படுத்த முடியாத அளவுக்கு பள்ளம் மேடாக காட்சி அளிக்கிறது. அவசரத்திற்கு அரசு மருத்துவமனை வருவோர் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். உதவி கோட்டபொறியாளர் தங்க அழகர்ராஜ்: ரோட்டை 5 மீட்டரில் இருந்து 7 மீட்டராக அகலப்படுத்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கும், என்றார்.

Related posts

Leave a Comment