வங்கியில் இல்லை சமூக இடைவெளி

சிவகாசி : சிவகாசி வங்கியில் சமூக இடைவெளியினை கடைபிடிக்காததால் கொரோனா தொற்று வாய்ப்புள்ளது.இங்குள்ள சேர்மன் சண்முகம் நாடார் ரோட்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது.

தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ஒரே நேரத்தில் அதிக வாடிக்கையாளர்கள் வருவதால் ஒரே இடத்தில் கூட்டமாக நிற்கின்றனர். மாஸ்க் அணிந்தால் போதும் என்ற மன நிலையில் வரும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியினை கடைபிடிப்பதில்லை. வங்கியில் முன்பு சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அடையாளமும் ஏற்படுத்தவில்லை. இதனால் நெருக்கியப்படி நிற்கின்றனர். இதன் மூலம் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இனியாவது சமூக இடைவெளியினை கடைபிடிக்க வாடிக்கையாளர் களும் முன் வர வேண்டும்.வங்கி நிர்வாகமும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related posts

Leave a Comment