ரஜினியை கேலி செய்த இந்தி நடிகருக்கு எதிர்ப்பு

ரஜினியை கேலி செய்யும் வகையில் டுவிட்டரில் பதிவிட்ட இந்தி நடிகர் ரோகித் ராயை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கடுமையாக கண்டித்தனர். இந்தியில் காபில், ஏக் கிலாடி ஏக் ஹஸீனா, அபார்ட்மெண்ட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் ரோகித் ராய். தேஸ் மெய்ன் நிகிலா ஹோகாந்த், ஸ்வபிமான் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்தும் பிரபலமாக இருக்கிறார். இரு தினங்களுக்கு முன்பு ரோகித் ராய் தனது டுவிட்டர் பக்கத்தில் கொரோனா பற்றிய பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் ரஜினிகாந்த் பெயரை இணைத்து கேலி செய்வதுபோன்ற வாசகம் உள்ள படமும் இடம்பெற்று இருந்தது. மேலும் அந்த படத்துடன், “கொரோனாவை அடக்குவோம். வேலைக்கு கவனமாக செல்லுங்கள், முக கவசம் அணியுங்கள். தினமும் பலமுறை கை கழுவுங்கள், நாம் அனுமதிக்காமல் கொரோனா வைரஸ் நம்மை தொற்றாது” என்றெல்லாம் பதிவிட்டு இருந்தார். இந்த பதிவு சர்ச்சையானது. ரஜினிகாந்தை…

Read More

உதவி செய்த இந்தி நடிகருக்கு ஆரத்தி எடுத்த தமிழ் பெண்கள்

சொந்த ஊர் திரும்ப உதவி செய்த பிரபல இந்தி நடிகருக்கு தமிழ் பெண்கள் ஆரத்தி எடுத்து நன்றி கூறியுள்ளனர். இந்தி நடிகர் சோனு சூட் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக வெளி மாநிலங்களில் சிக்கிய தொழிலாளர்களை பஸ், விமானம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து வருகிறார். இந்தநிலையில் சயான்கோலி வாடா பகுதியில் சிக்கிய தமிழர்கள் சொந்த ஊர் திரும்ப உதவி செய்யுமாறு அந்த பகுதியை சேர்ந்த சிலர் நடிகர் சோனு சூட்டின் அலுவலகத்துக்கு சென்று உதவி கேட்டனர். இதையடுத்து சோனு சூட் சயான்கோலி வாடாவில் சிக்கிய சுமார் 180 தமிழர்களை விமானம் மூலம் அனுப்பி வைக்க முயற்சி செய்தார். எனினும் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் பஸ் மூலம் மும்பையில் சிக்கிய தமிழர்களை சொந்த ஊருக்கு…

Read More

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் முறைகேடு- 3 பூசாரிகள் சஸ்பெண்டு

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் முறைகேட்டில் ஈடுபட்ட 3 பூசாரிகளை சஸ்பெண்டு செய்து கோவில் அறநிலையத் துறை உதவி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இங்கு பங்குனி, ஆடி, தை மாதங்களில் நடைபெறும் விழாக்களில் மக்கள் அதிக அளவில் சாமி தரிசனம் செய்வதுண்டு. இங்கு வழிபாடு செய்ய வரும் பக்தர்கள் தங்கம், வெள்ளி, பித்தளை உள்ளிட்ட பொருட்கள் மற்றும் விலையுயர்ந்த பட்டுப்புடவைகள் அங்க வஸ்திரங்களை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். இந்நிலையில் பக்தர்கள் காணிக்கை செலுத்திய பொருட்கள் முறையாக கணக்கில் கொண்டு வரப்படுவதில்லை என வந்த புகாரையடுத்து கோவிலில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை இருக்கன்குடி மாரியம்மன் கோவில் அறநிலையத் துறை உதவி ஆணையர் கருணாகரன் ஆய்வு செய்தார். அப்போது 3 பூசாரிகள் கோவில் காணிக்கைப்…

Read More

சென்னையில் இருந்து திரும்பிய சாத்தூர் தம்பதிக்கு கொரோனா பாதிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் சென்னையில் இருந்து திரும்பிய சாத்தூர் தம்பதிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 169 ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 10,477 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 167 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 503 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. 98 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டம் முழுவதும் உள்ள 7 தனிமைப்படுத்தும் முகாம்களில் 360 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதில் துபாயில் இருந்து வந்த 21 பேர் விருதுநகர் பெண்கள் கல்லூரி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் நேற்று சாத்தூர் அருகே உள்ள கலிங்கப்பட்டியை சேர்ந்த 28, 23 வயது இளம் தம்பதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி…

Read More

ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்- மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல் நிலை குறித்து கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவமனைக்கு சென்று விசாரித்தார். சென்னை: திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. வென்டிலேட்டர் பொருத்தபட்ட சமயத்தில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது. அதன் பின்னர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். வென்டிலேட்டர் மூலம் ஆக்சிஜன் தேவை குறைந்திருப்பதாகவும் கூறினர். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவமனைக்கு நேரில் சென்று ஜெ.அன்பழகனின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார். மேலும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். ஜெ.அன்பழகன் உடல்நிலை…

Read More

மாணவி நேத்ராவின் உயர் கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும்- முதலமைச்சர் அறிவிப்பு

ஏழைகளுக்கு உதவிய மதுரை சலூன் கடைக்காரரின் மகள் நேத்ராவின் உயர் கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை: மதுரையில் மேலமடையில் வசித்து வருபவர் மோகன். 47 வயதான மோகன், சலூன் நடத்தி வருகிறார். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 கிலோ அரசி, காய்கறிகள், பலசரக்கு சாமான்கள் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றை வழங்கி வருகிறார். இதற்காக தனது மகள் நேத்ராவின் படிப்புக்காக சேமித்து வைத்த 5 லட்சம் ரூபாயை செலவிட்டுள்ளார். மோகனின் மகள் நேத்ரா, தற்போது ஒன்பதாவது வகுப்பு படித்து வருகிறார். ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்து வருவதாக அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து மன் கீ பாத் நிகழ்ச்சியின்போது மகள் படிப்புக்காக வைத்திருந்த ஐந்து லட்சம் ரூபாய் பணத்தில் மக்களுக்கு உதவிய மோகனுக்கு பிரதமர் மோடி…

Read More

Tamil Nadu Electricity Board will not be privatized – Minister Thangamani

தமிழ்நாடு மின்சார வாரியம் தனியார் மயமாக்கப்பட மாட்டாது-அமைச்சர் தங்கமணி திட்டவட்டம் 🔲தமிழ்நாடு மின்சார வாரியம் எந்த சூழ்நிலையிலும் தனியார் மயமாக்கப்பட மாட்டாது என்று அமைச்சர் தங்கமணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 🔲நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்டுள்ள நுழைவு பாலத்தை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆய்வு செய்தார். 🔲பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிக விலைக்கு மதுபாட்டில்கள் விற்கும் டாஸ்மாக் கடைகள் குறித்து ஆதாரத்துடன் புகார் தெரிவித்தால், ஊழியர்கள் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று கூறினார்.

Read More

Government of Tamil Nadu.

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற அளவை நிர்ணயித்தது தமிழக அரசு . 🔲நாளொன்றுக்கு இவ்வளவு தொகையா என மக்கள் அதிர்ச்சியில் உரைக்கின்றனர் 🔲அதேநேரம் தனியார் மருத்துவமனைகள் மருத்துவமனையில் வேறு நோயாளிகள் தற்போது அனுமதிக்கப் படாததால் இது கொரோனே சீசன் என்பதால் இதிலேயே மருத்துவமனை நிர்வாக செலவுகள் அனைத்தையும் வசூலிப்பதற்கு முயற்சி செய்கிறார்கள் என கருத்து எழுந்துள்ளது 🔲குறிப்பாக ஊழியர்கள் சம்பளம் வங்கிக்கு கட்ட வேண்டிய தொகையை இதை அனைத்தையும் கணக்கிட்டு தனியார் மருத்துவமனைகள் இவ்வாறு கொள்ளை காசு வசூலில் ஈடுபடுவதாக சொல்லப்படுகிறது. 🔲உண்மையில் கொரோனே நோய்க்கு மருந்து இல்லை என்பதுதானே உண்மை 🔲கொரோனே நோய் தாக்கியவர்களுக்கு மிக சாதாரண சிகிச்சை மட்டுமே, சக்தி மிகுந்த உணவுகளும் கொடுக்கப்படுகிறது அதி தீவிரம் தேவைப்பட்டால் தான் வெண்டிலேட்டர் உபயோகப்படுத்தப்படுகிறது. 🔲 இதற்கு ஏன்…

Read More

கொரோனா பிறகான பள்ளிக் கல்வியில் மாற்றம் உருவாகும்! – மத்திய பள்ளிக் கல்வி செயலாளர்

கொரோனா பிறகான பள்ளிக் கல்வியில் மாற்றம் உருவாகும்! – மத்திய பள்ளிக் கல்வி செயலாளர் 🔲கொரோனா தாக்கத்திற்கு பிறகான பள்ளிகளில் கற்றல் முறையில் மாற்றம் இருக்கும் என்று மத்திய பள்ளிக் கல்விக்கான செயலாளர் அனிதா கார்வால் தெரிவித்துள்ளார். ஹரியானாவில் அமைந்துள்ள அசோக பல்கலைக்கழகம் சார்பில் கொரோனா தாக்கத்திற்கு பிந்தைய பள்ளிகளின் எதிர்காலம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. 🔲வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடைபெற்ற கருத்தரங்கத்தில் மத்திய மனிதவளத்துறையின் பள்ளி கல்விக்கான செயலாளர் அனிதா கார்வால் கலந்து கொண்டு பேசினார். 🔲அப்போது, இந்தியாவில் பள்ளிகள் திறக்கப்பட்டதும் நிறைய மாற்றங்கள் நடக்கும் என்று கூறியுள்ளார். நாடு முழுவதும் கல்வி பயிலும் 24 கோடி மாணவர்களுக்கும், புதிய கல்விமுறையை உள்வாங்குவதில் சற்று தடுமாற்றத்தை சந்திப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளளர். 🔲பள்ளிகள் திறக்கப்பட்ட பின்பு முன்னெச்சரிக்கையாக, சமூக இடைவெளி கடைபிடிப்பு, முகக்கவசம் அணிதல், பள்ளிகளை…

Read More

BREAKING NEWS

தமிழ்நாட்டில் இன்று 1458 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது 🔲தமிழ்நாட்டில் இன்று 7ஆவது நாளாக ஒரே நாளில் பாதிப்பு 1,000ஐ தாண்டியது 🔲தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30,000ஐ தாண்டியது

Read More