கொரோனா பிறகான பள்ளிக் கல்வியில் மாற்றம் உருவாகும்! – மத்திய பள்ளிக் கல்வி செயலாளர்

கொரோனா பிறகான பள்ளிக் கல்வியில் மாற்றம் உருவாகும்! – மத்திய பள்ளிக் கல்வி செயலாளர்

🔲கொரோனா தாக்கத்திற்கு பிறகான பள்ளிகளில் கற்றல் முறையில் மாற்றம் இருக்கும் என்று மத்திய பள்ளிக் கல்விக்கான செயலாளர் அனிதா கார்வால் தெரிவித்துள்ளார்.
ஹரியானாவில் அமைந்துள்ள அசோக பல்கலைக்கழகம் சார்பில் கொரோனா தாக்கத்திற்கு பிந்தைய பள்ளிகளின் எதிர்காலம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

🔲வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடைபெற்ற கருத்தரங்கத்தில் மத்திய மனிதவளத்துறையின் பள்ளி கல்விக்கான செயலாளர் அனிதா கார்வால் கலந்து கொண்டு பேசினார்.

🔲அப்போது, இந்தியாவில் பள்ளிகள் திறக்கப்பட்டதும் நிறைய மாற்றங்கள் நடக்கும் என்று கூறியுள்ளார். நாடு முழுவதும் கல்வி பயிலும் 24 கோடி மாணவர்களுக்கும், புதிய கல்விமுறையை உள்வாங்குவதில் சற்று தடுமாற்றத்தை சந்திப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளளர்.

🔲பள்ளிகள் திறக்கப்பட்ட பின்பு முன்னெச்சரிக்கையாக, சமூக இடைவெளி கடைபிடிப்பு, முகக்கவசம் அணிதல், பள்ளிகளை முறையாக பராமரித்தல் உள்ளிட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் அனிதா கார்வால் கூறியுள்ளார்.

🔲மேலும் வகுப்பறை கற்றல் முறையில் இருந்து வேறுபட்டு கற்கும் முறை மாணவர்களும், ஆசிரியர்களும் இடையே புதிய சூழல் உருவாகும் எனவும், மாணவர்களின் மனநிலையை சோதித்த பிறகே கற்றல் முறைக்கு பழக்கப்படுத்த முயற்சி எடுக்கப்படும் என்றும் அனிதா கார்வால் தெரிவித்துள்ளார்.

🔲ஆன்லைன் வழியிலான கல்வி கற்றல் முறையை மேலும் தரமான வகையில், அனைத்து மாணவர்களுக்கும் சமமான முறையில் சேன்று சேர தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Leave a Comment