நேத்ராவுக்கு முதல்வர் இ.பி.எஸ், வாழ்த்து: உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் என அறிவிப்பு

மதுரை; பிரதமர் மோடி, பாராட்டிய, மதுரை சலுான் கடைக்காரர் மோகன் மகள் நேத்ரா, 14, ஐ.நா. நல்லெண்ண தூராக நியமிக்கப்பட்டதற்கு முதல்வர் இ.பி.எஸ்., வாழ்த்து தெரிவித்தார்.

மதுரை மேலமடையைச் சேர்ந்த சலூன்கடைக்கார் மோகன், தனதுமகள் படிப்பிற்காக சேமித்த, 5 லட்சம் ரூபாயை, மகள் விருப்பப்படி, ஊரடங்கில் தவித்த ஏழைகளுக்கு நிவாரணப் பொருட்களாக வழங்கினார். இதை, ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பாராட்டினார்.

இதை தொடர்ந்து, ஐ.நா.,வின் நல்லெண்ண துாதராக, நேத்ராவை அறிவித்து, 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்குவதாக, ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று முதல்வர் இ.பி.எஸ், வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஐ.நா. நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்ட நேத்ராவுக்கு எனது வாழ்த்து. அனைத்து வகையிலும், சிறந்து விளங்கி தமிழ்நாடு, இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும். அவரது உயர்கல்வி படிப்பு செலவை அரசே ஏற்கும். இவ்வாறு முதல்வர் கூறினார்.

Related posts

Leave a Comment