நான் பவுலிங் போட்டதிலேயே இவங்க மூணு பேரும் தான் பெஸ்ட் – பிரெட் லீ

மும்பை : முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிரெட் லீ தான் பந்து வீசியவர்களில் சிறந்த மூன்று பேட்ஸ்மேன்கள் யார் என பட்டியலிட்டு இருக்கிறார். 2000மாவது ஆண்டுகளில் கிரிக்கெட் உலகில் சோயப் அக்தர் மற்றும் பிரெட் லீ தான் அதிவேகத்தில் பந்து வீசி வந்தனர். அவருக்கு எதிராக சிறந்த பேட்ஸ்மேன்கள் பலர் பேட்டிங் செய்வதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்.

சிறந்த பந்துவீச்சாளர் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், கங்குலி, சேவாக், யுவராஜ் சிங், சங்ககாரா, பிரையன் லாரா, இன்சமாம் உல் ஹக், ஜாக்கஸ் காலிஸ், கெவின் பீட்டர்சன் என பல முன்னணி வீரர்களுக்கு எதிராக அவர் சிறப்பாக பந்து வீசி உள்ளார்.

மூவர் அவர் தான் பந்து வீசியதில் மூன்று சிறந்த பேட்ஸ்மேன்களை சுட்டிக் காட்டி உள்ளார். அந்த மூவர் – சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா மற்றும் ஜாக்கஸ் காலிஸ். அவர்கள் மூவரைப் பற்றியும் சிறப்பான விஷயத்தையும் கூறி உள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் சச்சின் டெண்டுல்கர் பற்றி கூறுகையில், அவர் எப்போதுமே பந்தை அடிக்க கூடுதல் நேரத்தை பெற்று இருந்தார் என்றார். சிறப்பான பல வீரர்களுக்கு எதிராக ஆடி உள்ளதால் தன்னால் இதை உணர முடிகிறது எனவும் கூறினார் பிரெட் லீ.

பிரையன் லாரா அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த ஸ்டைலிஷ் பேட்ஸ்மேன் ஆன பிரையன் லாரா பற்றி கூறுகையில், ஆறு பந்துகளை அவருக்கு வீசினால் அவர் அதை ஆறு வெவ்வேறு இடங்களுக்கு அடித்து அனுப்புவார் என்றார் பிரெட் லீ.

ஜாக்கஸ் காலிஸ் அடுத்து தென்னாப்பிரிக்க அணியை சேர்ந்த, உலகின் சிறந்த ஆல் – ரவுண்டரான ஜாக்கஸ் காலிஸ் பற்றி குறிப்பிட்ட பிரெட் லீ, சச்சின் சிறந்த பேட்ஸ்மேன் என நான் எப்போதும் சொல்லி வருகிறேன். ஆனால், இந்த விளையாட்டின் சிறந்த வீரர் ஜாக்கஸ் காலிஸ் என்றார்.

காலிஸ் தான் சிறந்த வீரர் கேரி சோபர்ஸ் ஆடியதை வீடியோவில் மட்டுமே தான் பார்த்துள்ளதாக கூறிய அவர், அவர் இல்லாமல் தான் ஆடியதில் காலிஸ் தான் சிறந்த வீரர் என்றார். அவர் ஓபனிங்கில் பந்து வீசுவார், பேட்ஸ்மேனாக ஆடுவார், ஸ்லிப்பில் கேட்ச் பிடிப்பார் என்றார்.

Related posts

Leave a Comment