அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை பத்திரவு பதிவு அலுவலக ஊழியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் மேலும் 13 பேருக்கு சோதனை செய்யப்பட்டது.
அருப்புக்கோட்டை பத்திரவு பதிவு அலுவலக 54 வயது ஊழியர் கடந்த வாரம் விடுப்பு எடுத்திருந்த நிலையில் 4 நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டது. மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பத்திர பதிவு அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அலுவலக ஊழியர்கள் 9பேர், பாதிப்பு அலுவலர் வீட்டில் 4 பேரிடம் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.