ஆசிரியர்களுக்கு கபசுர குடிநீர்

சிவகாசி : சிவகாசி நகராட்சி சார்பில் அலுவலக பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள், கபசுர குடிநீரை கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி வழங்கினார். துாய்மை பணியாளர்கள்கள் கவுரவிக்கப்பட்டு இனிப்பு, சித்தா மருந்து வழங்கப்பட்டது. எஸ்.எச்.என்.வி., பெண்கள் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஆசிரியர்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. கொரோனா தடுப்பு களப்பணி உதவியாளர்கள், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு மாத்திரைகள், ஓமியோபதி மாத்திரைகள் வழங்கப்பட்டது.

Related posts

Leave a Comment