காய்கறி மார்க்கெட்டில் புரோக்கர் ; வியாபாரிகள் முறையீடு

விருதுநகர் : விருதுநகர் காய்கறி மார்க்கெட்டில் புரோக்கர்கள் வசூல் செய்வதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜியிடம் வியாபாரிகள் முறையிட்டனர்.

அப்போது அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கொரோனா ஊரடங்கால் நகராட்சி ஒதுக்கிய இடங்களில் வியாபாரம் செய்து வந்தோம். புது பஸ் ஸ்டாண்ட், உழவர்சந்தை, கே.வி.எஸ்., மேல்நிலை பள்ளி, இ.பி.,அலுவலகம் எதிரே உள்ள திடல் பகுதிகளில் எவ்வித வசூலும் இல்லை. ஆனால் நகராட்சி மைதானத்தில் அமைந்துள்ள கடைகளுக்கு மட்டும் தினசரி ரூ.50 வீதம் ஒவ்வொரு கடைக்கும் நாகமணி என்பவர் வசூலிக்கிறார். மேலும் இவர் வியாபாரிகளிடம் ரூ.2,500 முதல் ரூ.5 ஆயிரம் வரை பலவகைகளில் வசூல் செய்கிறார். இது வியாபாரிகளை மிகவும் பாதிக்கிறது என குறிப்பிட்டிருந்தனர். விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார்.

Related posts

Leave a Comment