பருவமழை முன் குடிமராமத்து ; அமைச்சர் அறிவுறுத்தல்

விருதுநகர் : மாவட்டத்தில் குடிமராமத்து பணிகளை பருவமழை துவங்கும் முன்பு நிறைவு செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேட்டுக்கொண்டார்.

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குடிநீர் வழங்கல் பணிகள் குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டத்தில் அவர் பேசியதாவது: குடிநீர் திட்டங்கள் முறையாக செயல்படுகிறதா என அதிகாரிகள் தினசரி ஆய்வு செய்ய வேண்டும். மாவட்டத்தில் 40 கண்மாய்களில் நடந்து வரும் குடிமராமத்து பணிகளை பருவ மழை துவங்குவதற்கு முன்பாக முழுமையாக நிறைவு செய்ய வேண்டும் , என்றார்.

கலெக்டர் கண்ணன் முன்னிலை வகித்தார். டி.ஆர்.ஓ., மங்களராமசுப்பிரமணியன், ஊரக திட்ட இயக்குனர் சுரேஷ் பங்கேற்றனர்.*இதை தொடர்ந்து அவர் கூறியதாவது: மாவட்டத்தின் 450 ஊராட்சிகளுக்கும் முறையாக குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இங்கு 6 குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தது முதல்வர் பழனிச்சாமி தான். இதனால் குடிநீர் பிரச்னை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் கஷ்டப்படும் இந் நேரத்தில் நல்ல எண்ணத்தோடு கூறும் கருத்துக்கள், அறிவுரைகளை யார் கூறினாலும் முதல்வர் ஏற்றுக் கொள்வார் , என்றார்.

Related posts

Leave a Comment