திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நிலை தேறி வந்த நிலையில் மீண்டும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை: திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. வென்டிலேட்டர் பொருத்தபட்ட சமயத்தில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது. அதன் பின்னர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். வென்டிலேட்டர் மூலம் ஆக்சிஜன் தேவை குறைந்திருப்பதாகவும் கூறினர். இந்நிலையில் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நிலை தேறி வந்த நிலையில் மீண்டும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று மாலையில் இருந்து ஜெ.அன்பழகனுக்கு தேவைப்படும்…

Read More

ஆளுநரின் உத்தரவு மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கியுள்ளது: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி மருத்துவமனைகளில் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவிக்கக் கூடாது என்று அம்மாநில துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. தற்போதுதான் இந்தியாவில் அதிகரிக்கும் காலம் என கணிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனைகளில் அதிகமான படுக்கை வசதிகளை ஏற்பாடு செய்து தயார் நிலையில் வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு மாநில அரசுகள் தள்ளப்பட்டுள்ளன. பொதுவாக டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் அரியானா, உத்தர பிரதேசம், பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் எல்லாவிதமான நோய்களுக்கும் சிகிச்சை பெறுவார்கள். ஆனால், பெரும்பாலான மருத்துவமனைகள் கொரோனா சிறப்பு வார்டாக மாற்றப்பட்டுள்ளன. இதற்கிடையில், டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் டெல்லிவாசிகளுக்கு சிகிச்சை கிடையாதா? என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளதாக கூறி, டெல்லி மருத்துவமனைகளில் டெல்லி வாசிகளுக்கே முன்னுரிமை என்று டெல்லி அரசு முடிவு எடுத்தது. ஆனால், டெல்லி மாநில…

Read More

Actress Varalakshmi Sarathkumar

நடிகை வரலட்சுமி சரத்குமார் சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி உதவி செய்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலால் தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பணிக்காக சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். இதற்காக மத்திய, மாநில அரசுகள் ரயில்கள், பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளன. ஆனாலும் இதில் இடம்கிடைக்காத தொழிலாளர்கள் நடைபயணமாகவும், சைக்கிளிலும் சொந்த ஊருக்கு திரும்பி செல்கின்றனர். இந்நிலையில் சென்னை உட்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நடிகை வரலட்சுமி சரத்குமார், உணவு, தண்ணீர், முகக்கவசங்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார். தான் தொடங்கிய சேவ் சக்தி அமைப்பின் மூலம் தொழிலாளர்களுக்கு அவர் இந்த உதவிகளை வழங்கினார். அப்போது அவரது தாயார் சாயா தேவி மற்றும் சேவ் சக்தி…

Read More

கொரோனா விழிப்புணர்வுக்காக சம்பளமே வாங்காமல் குறும்படத்தில் நடித்த பாடகர் வேல் முருகன்

பிரபல பாடகர் வேல்முருகன் கொரோனா விழிப்புணர்வுக்காக சம்பளமே வாங்காமல் குறும்படத்தில் நடித்து இருக்கிறார். சுப்ரமணியபுரம் படத்தில் மதுரை குலுங்க என்ற பாடல் மூலம் தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்தவர் பாடகர் வேல்முருகன். இதைத்தொடர்ந்து சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் தனது குரல் பங்களிப்பையும் எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, தர்மபிரபு ஆகிய படங்களில் நடித்தும் தனது திரைப் பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்து வருகிறார்.கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற அசுரன் படத்தில் இவர் பாடிய ‘கத்தரி பூவழகி…’ பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றது. திரைப்படங்களிலும் நாட்டுப்புற மேடைகளிலும் தனது பங்களிப்பை கொடுத்துவரும் வேல்முருகன் கொரோனா நோய் தொடர்பாக ஒரு விழிப்புணர்வு குறும்படத்தில் சம்பளமே இல்லாமல் நடித்து கொடுத்துள்ளார். கொரோனா நோய்க்காக பல்வேறு தனிப்பாடல்கள் வெளியிடப்பட்டாலும் வேல்முருகன் நடித்து வெளியாகியிருக்கும் ‘பச்சை மண்டலம்’ என்ற இந்த குறும்படம்…

Read More

சிரஞ்சீவி சார்ஜா மரணம் – கதறி அழுத அர்ஜுன்

மாரடைப்பால் காலமான சிரஞ்சீவி சார்ஜாவின் இறுதி ஊர்வலத்தில் நடிகர் அர்ஜுன் கதறி அழுதிருக்கிறார். பிரபல இளம் நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் காலமானார். இவர் கன்னட சினிமா உலகில் பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் அர்ஜுன் அவர்களின் மிக நெருங்கிய உறவினரான, இவர் தமிழில் சில படங்களில் நடித்த நடிகை மேக்னா ராஜை 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.  நடிகை மேக்னா கர்ப்பமாக இருக்கும் நிலையில் கணவர் சிரஞ்ஜீவி மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இளம் நடிகரின் மரணம் திரையுலகினரை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர். இவரது இறுதி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. இதில் நடிகர் அர்ஜுன் மற்றும் நடிகை மேக்னா அழுத காட்சிகள் பார்ப்பவர்களை  மனதை உருக்கும் அளவிற்கு இருந்தது.

Read More

அனைத்து மக்களும் சேர்ந்து படித்த ஒரே பாடம் அதுதான் – சூரி

நடிகர் சூரி வேலம்மாள் கல்வி வளாகத்தில் நிவாரண பொருட்களை வழங்கி கொரோனா வைரஸ் பற்றி பேசி இருக்கிறார். வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம்,   மாற்றம் பவுண்டேஷன் மூலம் இணைந்து சினிமாத்துறை நண்பர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், திருநங்கையர்களுக்கும், நடிகர் சூரி முகப்பேர் கிழக்கில் அமைந்துள்ள வேலம்மாள் பள்ளி வளாகத்தில் நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமத்தின் மனிதாபிமான செயலை அவர் பாராட்டினார். நடிகர் சூரி பேசுகையில், “எனது அக்கா, தங்கைகளான திருநங்கையர்களுக்கும், எனது அண்ணன் தம்பிகளான மாற்றுதிறனாளிகளுக்கும் எனது வணக்கங்கள். எல்லோரும் நல்லா இருக்கீங்கன்னு நம்புறேன். இந்த நேரத்தில் உங்கள் அனைவரையும் பார்த்ததில் எனக்கு சந்தோஷம், அதே நேரத்தில் எனக்கு கொஞ்சம் வருத்தமாகவும் இருக்கிறது. நாமெல்லாம் சந்திப்பதற்கு இப்படி ஒரு காலகட்டம் உருவாகியிருக்கக்கூடாது. கடந்த 3 மாதத்தில் உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் சேர்ந்து படித்த ஒரே…

Read More

விருதுநகர் மார்க்கெட் நிலவரம்- உளுந்து விலை உயர்வு

விருதுநகர் மார்க்கெட்டில் உளுந்து விலை உயர்ந்துள்ள நிலையில் பருப்பு வகைகள் வரத்து குறைந்துள்ளது. விருதுநகர்: விருதுநகர் மார்க்கெட்டில் உளுந்து 100 கிலோவுக்கு ரூ.800 விலை உயர்ந்து ரூ.7800 முதல் ரூ.8000 வரையிலும், உருட்டு உளுந்தம் பருப்பு ரூ.10,300 முதல் ரூ.11,300 வரையிலும் விற்பனை ஆனது. பாசிப்பயிறு 100 கிலோ ரூ.7,300 முதல் ரூ.8 ஆயிரம் வரையிலும், பாசிப்பருப்பு ரூ.11 ஆயிரம் முதல் ரூ.11,500 வரையிலும் விற்பனையானது. துவரை 100 கிலோ ரூ.6 ஆயிரம் ஆகவும், துவரம் பருப்பு ரூ.9 ஆயிரமாகவும் விற்பனைஆனது. விருதுநகர் மாவட்டத்தில் வத்தல் குவிண்டாலுக்கு ஏ.சி.வத்தல் ரூ.13 ஆயிரத்து 500 ஆகவும், நாடு வத்தல் ரூ.8500 ஆகவும், முண்டு வத்தல் ரூ.11 ஆயிரம் ஆகவும் விற்பனை ஆனது. மல்லி லயன் ரகம் 40 கிலோவுக்கு ரூ.3500 ஆகவும், நாடு ரகம் ரூ.2725 ஆகவும் விற்பனை…

Read More

விருதுநகர் மாவட்டத்தில் சகோதரிகள் உள்பட 5 பேருக்கு கொரோனா உறுதி

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று சகோதரிகள் உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 174 ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 10,640 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதில் 169 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 397 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. 98 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 405 பேர் 7 இடங்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் நேற்று மாவட்டத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. சிவகாசி பகுதியில் 28 வயது பெண்ணுக்கும், அவரது 30 வயது சகோதரிக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சமீபத்தில் சென்னையில் இருந்து திரும்பிய அப்பகுதியை…

Read More

கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க ஓராண்டுக்கு மேல் ஆகும்: சிங்கப்பூர் பிரதமர் சொல்கிறார்

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க ஓராண்டுக்கு மேல் ஆகும் என சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் பல நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தடுப்பூசி கண்டுபிடிக்கப் பட்டாலும் உலகம் முழுவதும் அனைவருக்கும் கிடைக்க பல மாதங்கள் ஆகும் என்று கருதப்படுகிறது. இந்தநிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி உலகம் முழுவதும் பரவலாக அனைவருக்கும் கிடைக்க குறைந்தது ஓராண்டு ஆகும் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரதமர் லிசியென்லூங் பேசியதாவது: கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இருந்து உலகம் முழுவதும் அனைவருக்கும் பரவலாக கிடைக்க குறைந்தது ஒரு ஆண்டாகும். அநேகமாக ஓராண்டு காலத்திற்கு மேல் ஆகலாம். நாம் கொரோனா வைரசுடன் நீண்ட நாட்கள் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.…

Read More