பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது- தமிழகத்தைச் சேர்ந்த பயிற்சி விமானி உள்பட 2 பேர் பலி

ஒடிசாவில் நிகழ்ந்த விமான விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பயிற்சி விமானி உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

புவனேஸ்வர்:

ஒடிசாவின் தேங்கனல் மாவட்டத்தில் உள்ள பிராசல் விமான தளத்தில் இருந்து ஒரு பயிற்சி விமானத்தில் விமானிகள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த பயிற்சி விமானம் திடீரென பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பயிற்சி விமானி அனீஸ் பாத்திமா, பீகாரைச் சேர்ந்த கேப்டன் சஞ்சீப் குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து பற்றி கதவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

Related posts

Leave a Comment