அன்பழகனுக்காக.. ரேலா மருத்துவமனைக்கு விரைந்து வந்த கொரோனா மருந்து.. பாசத்துடன் அனுப்பி வைத்த தமிழிசை

சென்னை: உயிருக்கு போராடி வரும் திமுகவின் ஜெ.அன்பழகனின் சிகிச்சைக்கு ஓடோடி வந்து உதவி உள்ளார் பாஜகவின் தமிழிசை சவுந்தராஜன்.. சிகிச்சை அளிப்பது தொடர்பாக லண்டன் மருத்துவர்களோடு ரேலா ஆஸ்பத்திரி மருத்துவர்கள் ஆலோசனை நடத்திய நிலையில், தேவையான மருந்துகளை தெலுங்கானாவில் இருந்து அனுப்பி வைத்துள்ளார் டாக்டர் தமிழிசை! ரேலா ஆஸ்பத்திரியில் கொரோனா பாதித்து தீவிர சிகிச்சையில் உள்ளார் சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் எம்எல்ஏவுமான ஜெ.அன்பழகன். கடந்த வாரம் 90 சதவீதம் ஆக்ஸிஜன் தேவைப்படும் அளவுக்கு ஆரம்பத்தில் மிக மோசமான நிலைமையில் உடல்நிலை இருந்தது.. 2 நாட்களுக்கு முன்பு அவருக்கு சற்று பரவாயில்லை, உடல் தேறி வருகிறது என்று டாக்டர்கள் தெரிவித்திருந்தனர்.. ஆனால், திரும்பவும் அவருக்கு உடல்நிலை கவலைக்கிடமாகி உள்ளது.. மீண்டும் ஆக்ஸிஜன் தேவை அளவு அவருக்கு அதிகரித்துள்ளது. அதேசமயம், அன்பழகனின் கிட்னி, இதயத்தின் செயல்பாடுகளும் மோசமடைந்துள்ளன..…

Read More

காலையிலேயே அனிருத் ஸ்டூடியோவை அதிரவைத்த மாஸ்டர் பாடல்

விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் பாடல் அனிருத் ஸ்டூடியோவை அதிர வைத்திருக்கிறது. விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாஸ்டர் படத்தின் இசையமைப்பாளர் அனிருத், மாஸ்டர் பாடல் உருவான வீடியோவை பகிர்ந்துள்ளார். மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி ரெய்டு பாடலின் பீட்ஸ்களை முதன் முதலில் உருவாக்கிய பிறகு தனது இசைக்குழுவுடன் அதை கேட்டு ரசிக்கும் வீடியோவை அனிருத் பகிர்ந்துள்ளார்.  மேலும், ” ஒரு அதிகாலை 6.45 நேரத்தில் முதல்முறையாக வாத்தி ரெய்டு பாடலின் பீட்ஸ்களை கேட்ட போது, இதுதான் எங்கள் ரியாக்‌ஷன்” என அவர் பதிவிட்டுள்ளார்.

Read More

புதிய உச்சத்தை தொட்ட ஸ்ருதி ஹாசன்

தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக இருக்கும் ஸ்ருதி ஹாசன், சமூக வலைத்தளத்தில் புதிய உச்சத்தை தொட்டு இருக்கிறார். கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் இந்தியில் அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக ஒரு ரவுண்டு வந்தார். இவர் நடித்த படங்கள் கடைசியாக 2017-ல் வெளியாகின. அதன் பின்னர் படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார்.தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்கிற படத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதியாசன். இந்த நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன், பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் தன்னை பின்தொடர்வோரின் எண்ணிக்கை 14 மில்லியனை தொட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Read More

நாமே தீர்வாக மாறுவோம்: இளைஞர்களுக்கு கமல் ஹாசன் அழைப்பு

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விட, அலட்சியத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் டுவிட் செய்துள்ளார். சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், கட்டுப்படுத்தும் விதமாக ‘நாமே தீர்வு’ என்ற இயக்கத்தை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தொடங்கினார். விருப்பம் உள்ளவர்கள் இந்த இயக்குத்தில் இணைந்து சென்னை மக்களுக்கு உதவ முன்வரலாம் என்று தெரிவித்திருந்தார். மேலும், ‘‘சென்னை தமிழ்நாட்டின் தலைநகர் என்றுதான் இருக்க வேண்டும். அது கொரோனாவில் தலைநகராக இருந்து விடக்கூடாது’’ என்று கூறியிருந்தார். இந்நி்லையில் இன்று கமல் ஹாசன் டுவிட்டவர் பக்கத்தில் ‘‘கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விட, அலட்சியத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம். இளைஞர்களே! நாம் இணைந்து உழைத்தால், பல குடும்பங்கள் அச்சமின்றி வாழ உதவலாம்! நாமே தீர்வாக மாறுவோம். #நாமேதீர்வு#NaameTheervuஇணைந்து மீட்போம் சென்னையை…Call 6369811111…

Read More

தமிழகத்தில் நாளை முதல் தனியார் பேருந்துகள் ஓடும் என அறிவிப்பு

தமிழகத்தில் நாளை முதல் தனியார் பேருந்துகள் ஓடும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க செயலாளர் அறிவித்துள்ளார். சென்னை: உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலை தடுக்க ஜூன் 30-ந்தேதி வரை 5ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டதுடன் அரசு பேருந்துகள் இயங்கவும் அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் தனியார் பேருந்துகள் ஓடும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க செயலாளர் தர்மராஜ் அறிவித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து பிற இடங்களில் தனியார் பேருந்துகள் இயங்கும். குறிப்பிட்ட மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் அரசின் விதிகளை பின்பற்றி 4,400 தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

Read More

நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கா?: சென்னை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி விளக்கம்

சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பது வதந்தி என சென்னை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். இந்தியாவில் நாடு தழுவிய பொது ஊரடங்கு மே மாதம் 31-ந்தேதியுடன் முடிவடைந்தது. அதன்பின் இந்திய அரசு ஒவ்வொரு பேஸ்-ஆக அன்லாக்டவுன் என்ற முறையில் தளர்வுகள் அளிக்கப்படும் என அறிவித்தது. ஆனால் ஜூன் 31-ந்தேதி வரை பொது ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கம் போன்றவைகளுக்கான தடையை  நீக்கவில்லை. இதற்கிடையில் தமிழக அரசு சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. சிறப்பு அதிகாரியை நியமித்தது. அதன்பின் அமைச்சர்களை கண்காணிக்க முதல்வர் உத்தரவிட்டார். சிறப்பு ஒருங்கிணைப்பாளர்…

Read More

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 1685 பேருக்கு கொரோனா: 21 பேர் பலி

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 1685 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 21 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக ஆயிரத்தை தாண்டிய வண்ணம் உள்ளது. நேற்று முன்தினம், நேற்று இந்த எண்ணிக்கை 1500-ஐ தாண்டியது. இந்நிலையில் இன்று இதுவரை இல்லாத அளவிற்கு 1,685 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 34,914 ஆக அதிகரித்துள்ளது அதேபோல் முதன்முறையாக பலி எண்ணிக்கை 20-ஐ தாண்டியுள்ளது. இன்று 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 307 ஆக உயர்ந்துள்ளது. இன்று பலியானவர்களில் 6 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். 798 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் 18,325 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 13,219 மாதிரிகள்…

Read More

பிசாசுத்தனமான அடி.. ஆரோக்கியம் போச்சுன்னா.. வாழ்க்கையே போச்சு..

சென்னை: “அடிபட்ட உடனேயே வலி தெரியாது… நமக்கு பட்டிருக்கும் அடி சாதாரண அடி இல்லை.. பிசாசுத்தனமான அசுர அடி.. ஆரோக்கியம்தான் முக்கியம்.. ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கையே போச்சு” என்று தனது ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அட்வைஸ் தந்துள்ளார். எந்தவித இயற்கை சீற்றம் ஏற்பட்டாலும் மக்களுக்கு ஓடோடி வந்து உதவி கொண்டு வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.. தண்ணீர் பிரச்சனை வந்தாலும் சரி, மாவட்டங்களில் ஒவ்வொரு பகுதிகளுக்கும் லாரிகளில் தண்ணீர் ஏற்றி கொண்டு வந்து பொதுமக்களுக்கு உதவுவார்கள். அந்த வகையில் இப்போது தமிழகத்தை கொரோனா உலுக்கி எடுத்து வருகிறது.. அதனால் பொதுமக்களுக்காக கொரோனா பாதித்தவர்களுக்கு பல்வேறு நிவாரணங்களை ரஜினி மன்றத்தினர் வழங்கி வருகின்றனர். இவர்களுக்கு ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளதுடன், உடல்நிலை குறித்த அட்வைஸ் ஒன்றையும் கூறியுள்ளார். இது தொடர்பாக ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த…

Read More

10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து: அரசு முடிவுக்கு ஸ்டாலின் வரவேற்பு+குட்டு! நாளைய ஆர்ப்பாட்டம் வாபஸ்

சென்னை: “பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை ரத்து செய்ததற்காகவும், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்ததற்காகவும் மாணவர்கள், பெற்றோர் மற்றும் அனைத்துக் கட்சிகளின் சார்பில் மனப்பூர்வமான வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்துக் கட்சிகளின் சார்பில் நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது” என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ஊரடங்கு நேரத்தில் ஜூன் 1-ம் தேதி பத்தாம் வகுப்புத் தேர்வு நடத்தப்படும்” என்று அறிவிக்கப்பட்டதிலிருந்து, 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் உயிர் பாதுகாப்புக் கருதி, அந்தத் தேர்வைத் தள்ளிவைக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளும் – ஆசிரியர்கள் பெற்றோர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் அ.தி.மு.க. அரசினை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள். தமிழ்நாட்டில் 5.80 லட்சம் பேருக்கு “கொரோனா சோதனை செய்துள்ளோம்” என்றும்; “33229” பேர் அந்த…

Read More

புதுவையிலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து.. முதலமைச்சர் நாராயணசாமி அதிரடி அறிவிப்பு

புதுச்சேரி: தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்திற்கென தனி கல்வி வாரியம் கிடையாது. புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் தமிழக பாடதிட்டங்களும், மாகி பிராந்தியத்தில் கேரளா பாடத்திட்டமும், ஏனாம் பிராந்தியத்தில் ஆந்திர பாடத்திட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் 10 ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி எனவும், காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80% மதிப்பெண் அளிக்கப்படும். எஞ்சிய 20% மதிப்பெண்கள் மாணவர்களின் வருகை அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார். இதனிடையே தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றி வருவதால், புதுச்சேரி மாநிலத்திலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி…

Read More