வாரத்தில் ஒரு நாள் இலவச சிகிச்சை

விருதுநகர் : மருத்துவம் என்பது மகத்துவம் வாய்ந்த சேவை. நோய் பட்டோரின் கதறலை அடக்கி அவருக்கு சுகம் அளிக்கும் வல்லமை மருத்துவத்திற்கு மட்டுமே உண்டு.

தற்போதைய காலக்கட்டத்தில் புது புது நோய்களால் மக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது போல் நோயின்றி வாழவே பலரும் ஆசைப்படுகின்றனர். ஏழைகளுக்கு ஒரு நோய் ஏற்பட்டால் மருத்துவ செலவால் குடும்ப பொருளாதாரம் பின்தங்கிவிடும் என பயந்தே பலர் நோயோடே தனது அன்றாட பணியை தொடர்கின்றனர். முற்றிய நிலையிலே மருத்துவமனையை நாடி பின் உயிரிழக்கின்றனர். நோயின் தன்மையை துவக்கத்திலே அறிந்தால் சிகிச்சையும் அதன் செலவும் குறைந்த அளவில் முடிந்து விடும்.

இதை கருத்தில் கொண்டு விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் உள்ள திருவேங்கடம் மருத்துவமனை செவ்வாய் தோறும் இலவச மருத்துவ சேவையை வழங்கி வருகிறது. ஏழை, நடுத்தர மக்கள் உட்பட பலரும் புற நோயாளி சிகிச்சைக்காக இங்கு வந்து செல்கின்றனர். நோயின் வீரியம், மேல்சிகிச்சை குறித்து மருத்துவர்களால் ஆலோசனை வழங்கப்படுகிறது. துவக்க கட்டத்திலே நோய் தன்மை அறிதல், சிறிய நோயை இலவசமாக குணப்படுத்தி கொள்தல் போன்ற நடவடிக்கைகளால் இம்மருத்துவமனையின் சேவை பலருக்கு வரமாக உள்ளது. தற்போது கொரோனா என்பதால் சளி, காய்ச்சலோடு வருபவர்கள் மட்டும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

ஏனைய புற நோயாளிகள் இங்கேயே சிகிச்சை பெறுகின்றனர். இந்த இலவச சேவைக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. செவ்வாய் தோறும் காலை 10:00 மணி முதல் பகல் 1:00 , மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை இச்சேவை தொடர்கிறது. கூலிகளுக்காக இலவச சிகிச்சை ஏழை மக்களுக்காக இலவச சேவையை துவங்கினேன். செவ்வாய் தோறும் பொது மருத்துவர் ஒருவர் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பார். பொது மருத்துவரால் பதிலளிக்க முடியாத பட்சத்தில் அந்நோயக்குரிய சிறப்பு மருத்துவர் மூலம் அலைபேசியில் ஆலோசனை வழங்கப்படுகிறது. நோயை தீர்க்கும் அடிப்படை மருந்துகள், சத்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

முன்பு காலை மட்டுமே இலவச சிகிச்சை கொடுக்கப்பட்டது. தற்போது கூலி வேலை செல்வோரை கருத்தில் கொண்டு மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது.ஹர்ஷவர்தன், நிர்வாக இயக்குனர் ,திருவேங்கடம் மருத்துவமனை, விருதுநகர்.

Related posts

Leave a Comment