நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கா?: சென்னை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி விளக்கம்

சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பது வதந்தி என சென்னை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நாடு தழுவிய பொது ஊரடங்கு மே மாதம் 31-ந்தேதியுடன் முடிவடைந்தது. அதன்பின் இந்திய அரசு ஒவ்வொரு பேஸ்-ஆக அன்லாக்டவுன் என்ற முறையில் தளர்வுகள் அளிக்கப்படும் என அறிவித்தது. ஆனால் ஜூன் 31-ந்தேதி வரை பொது ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.

தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கம் போன்றவைகளுக்கான தடையை  நீக்கவில்லை.

இதற்கிடையில் தமிழக அரசு சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. சிறப்பு அதிகாரியை நியமித்தது. அதன்பின் அமைச்சர்களை கண்காணிக்க முதல்வர் உத்தரவிட்டார். சிறப்பு ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டார்.

தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால், சென்னையில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை உள்பட இந்த நான்கு மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட இருக்கிறது என்ற செய்தி உலா வரத்தொடங்கியது.

இந்நிலையில்சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பது வதந்தி என சென்னை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

Related posts

Leave a Comment