நாமே தீர்வாக மாறுவோம்: இளைஞர்களுக்கு கமல் ஹாசன் அழைப்பு

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விட, அலட்சியத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் டுவிட் செய்துள்ளார்.
சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், கட்டுப்படுத்தும் விதமாக ‘நாமே தீர்வு’ என்ற இயக்கத்தை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தொடங்கினார். விருப்பம் உள்ளவர்கள் இந்த இயக்குத்தில் இணைந்து சென்னை மக்களுக்கு உதவ முன்வரலாம் என்று தெரிவித்திருந்தார். மேலும், ‘‘சென்னை தமிழ்நாட்டின் தலைநகர் என்றுதான் இருக்க வேண்டும். அது கொரோனாவில் தலைநகராக இருந்து விடக்கூடாது’’ என்று கூறியிருந்தார்.

இந்நி்லையில் இன்று கமல் ஹாசன் டுவிட்டவர் பக்கத்தில் ‘‘கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விட, அலட்சியத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம்.

இளைஞர்களே!

நாம் இணைந்து உழைத்தால், பல குடும்பங்கள் அச்சமின்றி வாழ உதவலாம்!

நாமே தீர்வாக மாறுவோம்.

#நாமேதீர்வு
#NaameTheervu
இணைந்து மீட்போம் சென்னையை…
Call 6369811111

என்று பதிவிட்டுள்ளார்.

Related posts

Leave a Comment