வீடே நுாலகம்…வாசிப்பே சுவாசம்

ஸ்ரீவில்லிபுத்துார் : பரபரப்பான வாழ்க்கை சூழலில் வீடே நுாலகமாகவும், வாசிப்பே சுவாசமாகவும் கருதி தினமும் 6 மணிநேரம், புத்தக வாசிப்பில் ஈடுபட்டு வருகிறார் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் செயல் அலுவலர் இளங்கோவன்.

மல்லிகை மணக்கும் மதுரை மாவட்டம் சிலைமான் புளியங்குளம் கிராமத்து சூழலில் படித்து பட்டம் பெற்று வழக்கறிஞராகவும் தற்போது அறநிலையத்துறை செயல் அலுவலராகவும் பணியாற்றும் இவர் தனது வீட்டில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட புத்தகங்கள் கொண்ட ஒரு நுாலகத்தை ஏற்படுத்தி அதிகாலையில் 4:00 மணி முதல் 7:00மணி, இரவில் 8:00 மணி முதல் 11:00 மணி வரை என தினமும் 6 மணிநேரம் நாளிதழ்கள் துவங்கி கதை, கவிதை, புதினம், இசை, இலக்கியம், நடனம், நாட்டியம், ஒப்பனை, பழந்தமிழ்கால நுால்கள், தற்கால கவிதைகள், புதிது புதிதாக வெளியாகும் புத்தகங்கள் என பல்வேறு நுால்களை படித்து வருகிறார்.

இளங்கோவன் கூறியதாவது: சிறு வயதில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் தினமும் புத்தகங்களை படிக்க அறிவுறுத்தினர். அன்று துவங்கிய வாசிப்பு பயணம் இன்று வரை தொடர்கிறது. இதனால் இன்று அரசுபணியாற்றும் தகுதியை பெற்றுள்ளேன். என்னுடைய வாசிப்பு பழக்கத்திற்கு விதை போட்டது கீழடி என்றாலும் விருட்சமாக்கியது மதுரை தான். ஏனெனில் மதுரை உயர்நீதிமன்றத்தில் தமிழ் இலக்கிய சொற்பொழிவாற்றியது என்னை பிரபலபடுத்தியது. அதிலும் ஆண்டாள் கோயிலில் உடையவர் எல்லோருக்கும் உடையவர் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றியது அரும்பாக்கியமாக கிடைத்தது.இதனால் மிகுந்த மனநிறைவுடன் என்னுடைய வாழ்க்கை பயணம் தொடர்கிறது. மனத்தை பக்குவபடுத்துகிறது. நாளிதழ்கள், புத்தகங்கள் வாசிப்பை இன்றைய இளைஞர்களும், பெண்களும் தினமும் மேற்கொள்ளவேண்டும், என்றார்.

Related posts

Leave a Comment