எச்சரிக்கை கொடி

விருதுநகர்:விருதுநகரில் கூரான பொருட்கள் ஏற்றி செல்லும் வண்டிகளுக்கு பின்னால் எச்சரிக்கை தரும் வகையில் எச்சரிக்கை கொடி கட்டாததால் விபத்துக்கள் தொடர்கிறது.

லோடு வாகனங்களில் கூரான பொருட்களை வாகனத்தின் அளவை விட நீளமான அளவு பொருட்க ஏற்றி செல்லும் போது எச்சரிக்கை தரும் விதமாக சிவப்பு கொடி கட்ட வேண்டும். இது தான் பொதுவான போக்குவரத்து விதி . ஆனால் இதை விருதுநகர் மாவட்டத்தில் பலரும் மீறுகின்றனர்.

கட்டுமான பொருட்கள், மர பொருட்கள் ஏற்றி செல்லும் வாகனங்களில் சிவப்பு கொடி கட்டுவதில்லை. வளைவுகளில் திரும்பும் போது, நெரிசலான பகுதிகளில் விபத்துக்களுக்கு வழி ஏற்படுத்துகிறது. இதை தடுக்க டிராபிக் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.

Related posts

Leave a Comment