பரிதவிப்பில் ஸ்ரீவி., தாமரை நகர் மக்கள்

ஸ்ரீவில்லிபுத்துார்:ரோடு, கழிவுநீர் ஓடை, குடிநீர் இணைப்பு, தெருவிளக்குகள் என அடிப்படை வசதிகளின்றி ஸ்ரீவில்லிபுத்துார் தாமரை நகர் பகுதி மக்கள் தினமும் பரிதவிக்கின்றனர்.

திருவண்ணாமலை செல்லும் ரோட்டை யொட்டி உள்ள இப்பகுதியில் உள்ள எந்த வீட்டுக்கும் குடிநீர் இணைப்பு தரப்படவில்லை. சாக்கடை வசதி இல்லாததால் வீடுகளின் வாசல் ரோட்டில் கழிவுநீர் சூழ்ந்து உள்ளது. இதனால் சுகாதாரக்கேடுடன் கொசுத்தொல்லை உருவாகி நோய்பரவும் சூழல் உருவாகி உள்ளது.

மழை பெய்தால் இங்குள்ள மண்ரோடு சகதிகாடாகிறது. மின்கம்பங்கள் இருந்தும் விளக்குகள் பொருத்தபடாததால் இரவில் இருள் சூழந்த நிலை காணப்படுகிறது.இவ்வாறு எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அவதிபட்டு வருகின்றனர். இதன் மீது ஸ்ரீவில்லிபுத்துார் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related posts

Leave a Comment