ஒரே நாளில் அதிர்ச்சி.. கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா 4ம் இடம்.. யுகேவை முந்தியது!

டெல்லி: கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 4ம் இடம் பிடித்துள்ளது. இந்தியாவில் மொத்தம் 297787 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தற்போது உலகம் முழுக்க தீவிரமாக பரவி வருகிறது. டிசம்பர் 2019ல் தாக்க தொடங்கிய கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுக்க 7535210 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 421158 பேர் பலியாகி உள்ளனர். 3819525 பேர் குணமடைந்து உள்ளனர். கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது.அமெரிக்காவில் மொத்தம் 2075001 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா நிலை அமெரிக்காவில் இன்று புதிதாக 8600 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 115393 பேர் அமெரிக்காவில் இதுவரை கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அமெரிக்காதான் கொரோனா காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதில் பிரேசில் இரண்டாம் இடம் வகிக்கிறது. பிரேசிலில் மொத்தம் 787489 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது

பிரேசில் நிலைமை இன்று பிரேசிலில் 12305 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. 40276 பேர் பிரேசிலில் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். இந்த பட்டியலில் ரஷ்யா மூன்றாம் இடம் வகிக்கிறது. ரஷ்யாவில் மொத்தம் 502436 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு இன்று 8799 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 6532 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

இந்தியா நிலைமை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 4ம் இடம் பிடித்துள்ளது. இந்தியாவில் மொத்தம் 297787 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இந்தியா யுகேவை முந்தியுள்ளது.இந்தியாவில் நிலைமை மோசமாகி வருகிறது.

யுகேவில் எப்படி யுகேவில் மொத்தம் 291409 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று மட்டும் இந்தியாவில் 10050 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று இந்தியாவில் கொரோனா காரணமாக 370 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் மொத்தமாக 8477 பேர் பலியாகி உள்ளனர்.

Related posts

Leave a Comment