பள்ளி மாணவர்களுக்கு ஆன்-லைன் போட்டிகள்- இஸ்ரோ அறிவிப்பு

பள்ளி மாணவர்களின் திறமையை அதிகரிக்க இஸ்ரோ ‘சைபர் ஸ்பேஸ்’ போட்டியை அறிவித்துள்ளது. அதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் ஆன்-லைனில் பதிவு செய்து கொள்ளலாம். சென்னை: பள்ளி மாணவர்களின் திறமையை அதிகரிப்பதற்காக இஸ்ரோ ‘சைபர் ஸ்பேஸ்’ போட்டிகளை ஆன்-லைன் மூலம் நடத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது 1 முதல் 3-ம் வகுப்புக்கான படம் வரைதல் போட்டி, 4 முதல் 8-ம் வகுப்புக்கான மாதிரிகள் தயாரிக்கும் போட்டி, 9 முதல் 10-ம் வகுப்புக்கான கட்டுரை போட்டி (இந்தி மற்றும் ஆங்கிலம்), பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புக்கான கட்டுரை போட்டி, விண்வெளி வினாடி வினா போட்டி (இந்தி மற்றும் ஆங்கிலம்) நடத்தப்படுகிறது.

Read More

மதுரை-விழுப்புரம் ரெயில் நேரம் மாற்றம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

மதுரை-விழுப்புரம் இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரெயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. மதுரை: தெற்கு ரெயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கடந்த 1-ந்தேதி முதல் தமிழகத்தில் 4 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மதுரை-விழுப்புரம் இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரெயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. மதுரை- விழுப்புரம் (வண்டி எண்: 02636) சிறப்பு ரெயில் காலை 7 மணிக்கு பதிலாக நாளை(சனிக்கிழமை) முதல் காலை 8 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும். விழுப்புரம்- மதுரை(02635) இடையே மதியம் 3.05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் நாளை முதல் மாலை 4 மணிக்கு புறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read More

விருதுநகர் மாவட்டத்தில் தம்பதி உள்பட மேலும் 7 பேருக்கு கொரோனா

விருதுநகர் மாவட்டத்தில் தம்பதி உள்பட மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 11,324 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 180 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 433 பேருக்கு மருத்துவ பரிசோதனை முடிவு இன்னும் வரவில்லை. அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 124 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 7 தனிமைப்படுத்தும் முகாம்களில் 227 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று விருதுநகர் கருப்பசாமி நகரை சேர்ந்த 45 வயது பெண்ணுக்கும், ராஜபாளையத்தை சேர்ந்த 40 வயது பெண்ணுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் திருச்சுழி அருகே உள்ள கரிசல்குளத்தை சேர்ந்த 80 வயது முதியவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர்கள் 3 பேருமே சென்னையில் இருந்து திரும்பியவர்கள் ஆவர். இதில்…

Read More

நுண்ணீர் பாசன திட்டத்தில் விவசாயிகள் பயன் பெறலாம்- அதிகாரி தகவல்

நுண்ணீர் பாசன திட்டத்தில் விவசாயிகள் பயன் பெறலாம் என்று வெம்பக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார். தாயில்பட்டி: வெம்பக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் கார்த்திகா செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- வெம்பக்கோட்டை வட்டாரத்தில் நடப்பு ஆண்டு பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்களது பயிர்களுக்கு நுண்ணீர் பாசனம் அமைத்து பயன்பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மற்றும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்திலும் நுண்ணீர் பாசனம் அமைக்கப்பட்டு வருகிறது. நுண்ணீர்பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல், போட்டோ, கணினி சிட்டா, பயிர் அடங்கல், சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று, நில வரைபடம், மண் மற்றும் நீர் பரிசோதனை முடிவு…

Read More

முக கவசம் அணியாத 1,367 பேர் மீது வழக்கு

சிவகாசி டவுன், சிவகாசி கிழக்கு, மாரனேரி, திருத்தங்கல், எம்.புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் முக கவசம் அணியாமல் வெளியே சென்ற 1,367 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சிவகாசி: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு அணியாமல் வருபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். துணைபோலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் உத்தரவின் பேரில் சிவகாசி டவுன், சிவகாசி கிழக்கு, மாரனேரி, திருத்தங்கல், எம்.புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் முக கவசம் அணியாமல் வெளியே சென்ற 1,367 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Read More

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற சென்னை சப்-இன்ஸ்பெக்டர் பலி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற சப்-இன்ஸ்பெக்டர், டிப்பர் லாரி மோதிய விபத்தில் பரிதாபமாக இறந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர்: தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூரை சேர்ந்தவர் சாலமன் வேதமணி. இவருடைய மகன் பிரதீஸ் (வயது 30). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் சென்னை தலைமை செயலகத்தில் ரோவிங் யூனிட்டில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் இவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். விடுமுறை முடிந்ததால் பணிக்கு செல்வதற்காக நேற்று இவர் வீரகேரளம் புதூரில் இருந்து மோட்டார்சைக்கிளில் மதுரையை நோக்கி வந்து கொண்டு இருந்தார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த நத்தம்பட்டி அருகே வந்த போது எதிரே மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி, பிரதீஸ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பிரதீஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த…

Read More

முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர்: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தநிலையில் வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அணியாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நகர சுகாதாரத்துறை சார்பில் சுகாதார ஆய்வாளர்கள் மேட்டு தெரு மார்க்கெட், மங்காபுரம் மார்க்கெட் ஆகிய பகுதிகளுக்கு சென்று முக கவசம் அணியாமல் யாரேனும் வருகிறார்களா? என ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முக கவசம் அணியாமல் வந்த 12 பேருக்கு தலா ரூ.100 வீதம் அபராதம் விதித்தனர்.

Read More

பிற மாவட்டங்களுக்கு செல்ல யாரையும் அனுமதிக்க கூடாது- வியாபார தொழில்துறை சங்கம் வலியுறுத்தல்

கொரோனா வேகமாக பரவி வருவதால் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்ல யாரையும் அனுமதிக்க கூடாது வியாபார தொழில்துறை சங்கம், முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. விருதுநகர்: விருதுநகர் வியாபார தொழில்துறை சங்க தலைவர் வி.வி.எஸ்.யோகன், முதல்-அமைச்சருக்கு மனு ஒன்று அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு சிறப்பாக செய்து வருகிறது. இந்தநிலையில் கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதில் சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள 3 மாவட்டங்களில் தான் அதிக அளவில் பாதிப்பு உள்ளது. சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு வருவோர் மூலம் கொரோனா தொற்று பரவும் நிலை ஏற்பட்டு வருகிறது. ஆகையால் சென்னையில் இருந்து 10 நாட்களுக்கு யாரையும் பிற மாவட்டங்களுக்கு வர தடைவிதித்து யாரையும் அனுமதிக்க கூடாது. அதேபோல சென்னையில்…

Read More

#CoronaLockdown #NarendraModi #IndiaFightsCOVID19 #EdappadiKPalaniswami

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், பொது முடக்கம் தொடர்பாகவும் ஜூன் 16, 17ல் பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். #CoronaLockdown #NarendraModi #IndiaFightsCOVID19 #EdappadiKPalaniswami

Read More

பாகிஸ்தானில் ஒரே நாளில் 6,397 பேருக்கு கொரோனா

கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தானில் அதிகபட்சமாக 6,397 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்: உலகையே அச்சுறுத்தி பலரை பலி வாங்கி வரும் கொரோனா பாகிஸ்தானில் தற்போது வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவுவதை தடுக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பொதுஇடங்களில் மக்கள் சமூகஇடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தானில் அதிகபட்சமாக 6,397 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,25,933 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானில் கொரோனாவால் ஒரே நாளில் 107 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு இதுவரை மொத்தம் 2,463 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 40,247 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். உலக அளவில் கொரோனாவால்…

Read More