மதுரை-விழுப்புரம் ரெயில் நேரம் மாற்றம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

மதுரை-விழுப்புரம் இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரெயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

மதுரை:

தெற்கு ரெயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடந்த 1-ந்தேதி முதல் தமிழகத்தில் 4 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மதுரை-விழுப்புரம் இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரெயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

மதுரை- விழுப்புரம் (வண்டி எண்: 02636) சிறப்பு ரெயில் காலை 7 மணிக்கு பதிலாக நாளை(சனிக்கிழமை) முதல் காலை 8 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும். விழுப்புரம்- மதுரை(02635) இடையே மதியம் 3.05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் நாளை முதல் மாலை 4 மணிக்கு புறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment