ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே ஸ்டேஷன் நடைமேம்பால கட்டுமானம் துவக்கம்

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே ஸ்டேஷனில் நடைமேம்பாலம் கட்டுமானப்பணி நேற்று துவங்கியது.

இங்குள்ள பிளாட்பார்ம் தாழ்வாகவும், நீளம், உயரம் குறைந்தும், நடைமேம்பாலம்

இல்லாமலும் இருந்தது. பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். நடைமேம்பாலம் அமைக்ககோரி தனுஷ்குமார் எம்.பி., சந்திரபிரபா எம்.எல்.ஏ., கோட்ட ரயில்வே அதிகாரிகளை வலியுறுத்தினர். பயணிகள் சார்பில் சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் முறையிடப்பட்டது.

மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ரயில்வே நிர்வாகம் ஏற்றது. முதலாவது பிளாட்பார்ம் எஸ்.1 மற்றும் எஸ்.2 ரயில் பெட்டிகள் நிற்குமிடத்தில் நடைமேம்பாலம் அமைகிறது. இதற்கான கட்டுமானப்பணி துவங்கியது.

Related posts

Leave a Comment