கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு சான்றிதழ்

அந்தியூர், அம்மாபேட்டையில் கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு சான்றிதழை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் வழங்கினார்.

ஈரோடு:

கொரோனா பாதுகாப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி அந்தியூரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், அந்தியூர் இ.எம்.ஆர். ராஜா எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டு, அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் பர்கூர், வெள்ளித்திருப்பூர் போலீசாருக்கு சான்றிதழ்கள் வழங்கினர்.

இதேபோல் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர் ஆகியோர் கலந்து கொண்டு, போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் உள்பட 38 பேருக்கு பாராட்டு சான்றிதழை வழங்கினார்.

மேலும் போலீசாரிடம் போலீஸ் சூப்பிரண்டு பேசும்போது, ‘கொரோனாவை தடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டியது அவசியமாகும். மேலும் கடமையின் போது வேகம், விவேகம், நமது பாதுகாப்பு ஆகியவற்றை ஒவ்வொருவரும் கருத்தில்கொண்டு பணியாற்ற வேண்டும்’ என்றார்.

Related Tags :

Related posts

Leave a Comment