‘மாஸ் கிளீனிங்’: நகராட்சிகளில் மீண்டும் துவக்க வேண்டும்: அடிப்படை வசதிக்காக மக்கள் எதிர்பார்ப்பு

சிவகாசி: விருதுநகர் நகராட்சிகளில் நிறுத்தப்பட்டிருந்த’மாஸ் கிளீனிங்’ பணியை மீண்டும் துவக்கி அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


விருதுநகர், சிவகாசி, திருத்தங்கல், அருப்புக்கோட்டை உள்ளிட்ட நகராட்சிகளில் வாரம் தோறும் ‘மாஸ் கிளீனிங்’ பணிகள் நடந்தன. நகராட்சியில் ஏதாவது ஒரு வார்டினை சுழற்சி முறையில் தேர்வு செய்து தெருக்களில் குவியும் குப்பைகளை அகற்றுதல், சாலை சுத்தம், வாறுகால் துார் வாருதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன. இவை சுகாதார மேற்பார்வையாளர்கள், ஆய்வாளர்கள் தலைமையில் தாய்மை பணியாளர்கள் மேற்கொண்டனர்.

வார்டுகளில் சுகாதாரம் மேம்பட்டது.தற்போது மாஸ் கிளீனிங் நடக்காததால் நகரங்களில் குப்பைகள் அகற்றாமல் துர்நாற்றம் எடுக்கிறது. வாறுகால் துார்வாரப்படவில்லை. கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. கொரோனா முன்னெச்சரிக்கையாக ஒரு சில நகாரட்சிகளில் சில நாட்கள் மட்டுமே மாஸ் கிளீனிங் நடந்தது. இரு ஆண்டாக நிறுத்தப்பட்டிருக்கும் மாஸ் கிளீனிங் பணியை மீண்டும் துவக்க வேண்டும். கொசுப்புழு உற்பத்தியை த

டுத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நோய்க்கு எதிரான வாய்ப்பு

நகராட்சி பகுதிகளில் செயல்பாட்டில் இருந்த மாஸ் கிளீனிங் பணியால் வார்டுகளில் சுத்தம், சுகாதாரம் சிறப்பாக இருந்தது. இப்பணியை நிறுத்தியதால் வார்டுகள் அலங்கோலமாக

காட்சியளிக்கிறது. தெருக்களில் குப்பை அகற்றம் மற்றும் ரோட்டிலுள்ள கற்கள், துாசிகள் அகற்றம் போன்ற பணிகள் நடை பெறவில்லை. மாஸ் கிளீனிங் பணியை நகராட்சி நிர்வாகங்கள் மீண்டும் துவக்க வேண்டும். இது கொரோனாவை வெல்லவும் வாய்ப்பாக அமையும்.

பால்பாண்டி, வியாபாரி, சிவகாசி

Related posts

Leave a Comment